Canada: glacier-viewing bus கவிழ்ந்த விபத்தில் மூவர் மரணம்... இந்தியர்களின் நிலை என்ன?
கனடாவில் Alberta, Jasper தேசிய பூங்காவுக்கு சுற்றுலாத் தளத்திற்கு பயணிகளை அழைத்துச் சென்ற glacier-viewing bus சிறப்பு சுற்றுலா பேருந்து கவிழ்ந்ததில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன
கனடாவில் Alberta, Jasper தேசிய பூங்காவுக்கு அருகில் உள்ள பிரபலமான சுற்றுலா இடத்திற்கு பயணிகளை அழைத்துச் சென்ற glacier-viewing bus என்ற சிறப்பு சுற்றுலா பேருந்து திடீரென கவிழ்ந்ததில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆல்பர்ட்டாவின் ஜாஸ்பர் தேசிய பூங்காவில் உள்ள கொலம்பியா ஐஸ்ஃபீல்ட் அருகே சாலையில் சென்றுக் கொண்டிருந்த இந்த சுற்றுலா பேருந்து தடம் புரண்டு உருண்டதாக கனடாவின் அரசு செய்தி நிறுவனம் CBC தெரிவித்துள்ளது.
ஊடகங்களால் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்களில் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம் கொண்ட glacier-viewing bus பாறைச் சரிவில் கிடப்பது தெரிகிறது. இந்த சிறப்பு பேருந்து, பனி அதிகமாக உள்ள இடங்களில் செல்ல வேண்டும் என்பதால் monster-truck ரக டயர்கள் பொருத்தப்பட்டது.
பேருந்து சென்றுக் கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி உருண்டு சென்றதாக இந்த விபத்தை நேரில் பார்த்த Vanja Krtolica என்பவர் The Globe and Mail பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.
Also Read | JULY 19 Worldwide Corona Update: உலக அளவில் கொரோனா பாதிப்பு அண்மை நிலவரம்
"திடீரென்று, எல்லோரும் கத்த ஆரம்பித்தார்கள், பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டில் இருந்து பேருந்து மீறியதை அனைவரும் பார்த்தோம்" என்று விபத்தில் சிக்கிய பேருந்தில் இருந்த கிர்டோலிகா கூறினார்.
"33 டிகிரி செங்குத்தான மலைப் பகுதியில் சென்றுக் கொண்டிருந்த பேருந்து, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது" என்று அவர் The Globe and Mail செய்தித்தாளிடம் தெரிவித்தார்.
கொலம்பியா ஐஸ்ஃபீல்டின் Athabasca Glacier என்ற பனிப்பாறைகள் இருக்கும் சுற்றுலாத் தளத்திற்கு பயணிகளை அழைத்துச் செல்லும் Pursuit என்ற நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளானதாக கனடாவின் அரசு செய்தி நிறுவனம் CBC தெரிவித்துள்ளது.
பேருந்தில் இருந்த 27 பயணிகளில், "மூன்று பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. பலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது" என்று Jasper Royal Canadian Mounted Police அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதை குளோபல் நியூஸ் மேற்கோளிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் தொலைதூர இடத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாகவும், பின்னர் விமானம் மற்றும் ஆம்புலன்ஸ் மூலமாகவும் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு கனடாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாப் பகுதிகளில் ஒன்றான Banff மற்றும் Jasper national parks வழியாக செல்லும் அழகிய Icefields Parkway பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.