நியூடெல்லி: டிரம்ப், ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் சிக்கியுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது  டிரம்புடன் இருந்த ரகசிய உறவு குறித்து ஆபாச நடிகையான ஸ்டார்மி டேனியல்ஸ் பரபரப்பு தகவலை வெளியிட்டார். இந்த குற்றச்சாட்டை டிரம்ப் மறுத்தார். இதையடுத்து இவ்விவகாரம் குறித்து ஸ்டார்மி பேசாமல் இருக்க அவருக்கு 1 கோடி ரூபாய் டிரம்ப் மூலம் வழங்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தொகை டிரம்பின் தேர்தல் வரவு, செலவு கணக்கில் சட்ட ரீதியிலான செலவு என்று குறிப்பிடப்பட்டது. அமெரிக்காவில் பொய்யாக வணிக செலவை காட்டுவது சட்ட விரோதம் என்பதால் டொனால்டு டிரம்ப் மீது விசாரணை நடந்து வந்த நிலையில் அவர் மீது சமீபத்தில் தேர்தல் பிரச்சார வணிக சட்டத்தின் கீழ் கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதனால் டிரம்ப் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.


மேலும் படிக்க | நீதிமன்றத்தில் சரணடைந்தார்  டிரம்ப்... அமெரிக்காவில் பரபரப்பு!


இந்த நிலையில் ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் நேற்று அமெரிக்க நீதிமன்றத்தில் டிரம்ப் சரண் அடைவதாக கூறப்பட்டது. இதனையடுத்து நீதிமன்றம் வந்த அவரிடம் சுமார் 10-15 நிமிடங்கள் விசாரணை நடைபெற்றது. பின்னர் டிரம்ப் கைது செய்யப்பட்டார்.


அவரிடம் கைரேகை பதிவு செய்யப்பட்டது. டொனால்டு டிரம்ப் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்துக்கு எதிராக அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.


மேலும் படிக்க | நான் திரும்பி வந்து விட்டேன்... முகநூலில் பதிவிட்ட டொனால்ட் டிரம்ப்!


இதெல்லாம் ஒருபுறம் இருக்க சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் முன்னாள் அமெரிக்கா அதிபர் ட்ரம்பை கலாய்த்து வருகின்றனர். அந்த வரிசையில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக பல கருத்துக்களை தெரிவித்து வரும் மேற்கு வங்கத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி  மஹுவா மொய்த்ரா டிரம்ப் கைதையும்  பாஜக கட்சியையும் விமர்சிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.



டிரம்ப் கைதியிலிருந்து தப்பிக்க பாஜக கட்சியில் இணைந்து விட்டார் என்று கூறி ட்ரம்ப் பாஜக துண்டு அணிந்திருப்பதை போன்று எடிட் செய்யப்பட்ட ஒரு மீமை பதிவிட்டிருக்கிறார்.


ஏற்கனவே மஹுவா மொய்த்ராவை பொறுத்தவரை அதானி விவகாரம் பற்றியும் குஜராத் கலவரம் பற்றியும் பல வெளிப்படையான கருத்துக்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ட்ரம்பையும் பாஜகவையும் விமர்சித்து இவர் வெளியிட்ட பதிவு இணையத்தில் தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.


மேலும் படிக்க | ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம்... டொனால்டு டிரம்ப் மீது கிரிமினல் வழக்கு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ