பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானுக்கு மிகுந்த அச்சுறுத்தல்
ஹபீஸ் சயீத் பாகிஸ்தானுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக விளங்குவார் என பாதுகாப்பு மந்திரி கவாஜா ஆசிப் கூறியுள்ளார்
பாகிஸ்தானைச் சேர்ந்த ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் மீது 2008-ம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. ஜமாத்-உத்-தாவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையத். மும்பை குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளி ஆவார். மேலும் இந்தியாவில் நடந்த பல்வேறு தாக்குதல்களில் முக்கிய மூளையாக செயல்பட்டவர்.
ஹபீஸ் சயீத்தும், அவரது கூட்டாளிகள் 4 பேரும் பாகிஸ்தான் அரசால் கடந்த மாதம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். மேலும் அவரது இயக்கத்தினர் 37 பேரும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டோரின் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஹபீஸ் சயீத் பயங்கரவாதிதான் என பாகிஸ்தான் ஒப்புக்கொள்கிற வகையில், அவரது பெயர் பயங்கரவாத தடுப்பு சட்ட பட்டியலின் 4-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது. அவருடன் அவரது நெருங்கிய கூட்டாளிகளான காஜி காசிப், பைசாலாபாத்தை சேர்ந்த அப்துல்லா ஒபைது, முரித்கேயை சேர்ந்த ஜாபர் இக்பால், அப்துர் ரகுமான் ஆகிய நால்வரது பெயர்களும் பயங்கரவாத தடை சட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டன. பஞ்சாப் மாகாண அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஹபீஸ் சயீத் குறித்து பாகிஸ்தான் பாதுகாப்புதுறை மந்திரி கவாஜா ஆசிப் கூறியதாவது:-
ஜமாத் உத் தாவா தலைவரும் மும்பை தாக்குதலில் முக்கிய மூளையாக செயல்பட்டவருமான ஹபீஸ் சயீத் நமது நாட்டு பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலாக விளங்குவார் என கூறியுள்ளார்.