புதுடெல்லி: மும்பை தாக்குதலின் சூத்திரதாரி மற்றும் லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத் இந்தியாவுக்கு எதிராக சமூக ஊடகங்கள் மூலம் சதி செய்துவருகிறான். ஹபீஸ் சயீத் பாகிஸ்தானின் 45 நகரங்களில் அலுவலகங்களைத் திறந்துள்ளதாக சைபர் நிபுணர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஒன்று கூறுகிரது. பாகிஸ்தானில் உள்ள அலுவலகங்கள் மூலம் ஏராளமான இளைஞர்கள் ஹபீஸ் சயீத்தின் சமூக ஊடகக் குழுவுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., லஷ்கர் பயங்கரவாதிகளை சமூக ஊடகங்களுடன் இணைத்து வருவதாகவும், இந்த பயங்கரவாதிகள் சமூக ஊடக ஆர்வலர்கள் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவுக்கு எதிரான போலி பிரச்சாரம் மற்றும் நாட்டில் கலவரத்தை பரப்ப சதிச் செயல்கள் திட்டமிடப்படுகின்றன. பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசாங்கத்தின் மீது அவதூறுகளை பரப்புவதற்காக ஹபீஸ் சயீத்தின் ஆயிரக்கணக்கான சமூக ஊடக குழுவினரும் ஹேஷ்டேக் மூலம் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை பரப்பத் தொடங்கியுள்ளனர்.  


ஹபீஸ் சயீத்தின் சமூக ஊடக குழு 'JuD Cyber Team' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு டெல்லியில் நடந்த கலவரங்கள் மற்றும் CAA க்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது,  'JuD Cyber Team', சமூக ஊடகங்களில் ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் இந்தியாவுக்கு எதிராக ஏராளமான ஆட்சேபத்திற்குரிய பதிவுகளைப் பகிர்ந்துள்ளனர்.   


Read Also | தென்னிந்தியாவில் IS தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரிப்பு...திடுக்கிடும் தகவல்


பல்வேறு ஹேஷ்டேக்குகள் மூலம், இந்தியாவில் முஸ்லிம்களுக்கு நடந்த அட்டூழியங்கள் மற்றும் நாட்டில் கலவரங்களை பரப்ப சதி செய்ததாக, பல போலிச்  செய்திகளுடன் கூடிய பல பதிவுகள் பகிரப்பட்டன. வளைகுடா நாடுகளை இந்தியாவுக்கு எதிராகத் தூண்டும் முயற்சியில் ஐ.எஸ்.ஐ (ISI) மிகப் பெரிய பங்கைக் கொண்டிருந்தது. சைபர் துறையில் நிபுணத்துவம் பெற்ற INNFU தயாரித்த அறிக்கையில், இந்தியாவுக்கு எதிராக இளைஞர்களை மூளைச் சலவை ஜிஹாத் மற்றும் games appகளை ஹபீஸ் சயீத் பயன்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது. 'JuD Cyber Team'இன் விளையாட்டுச் செயலிகளின் மூலம், இந்தியா உட்பட முழு உலகிலும் ’ஜிஹாத்’ என்ற முழக்கத்தைப் பரப்ப லஷ்கர்-இ-தொய்பா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.  


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR