உலகின் விலை உயர்ந்த பைக் இதுதான்; விலை ரூ.12 கோடி மட்டும்!
முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான Harley Davidson ஆனது ரூ.12 கோடி மதிப்பில் தனது அடுத்த படைப்பினை வெளியிட்டுள்ளது!
முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான Harley Davidson ஆனது ரூ.12 கோடி மதிப்பில் தனது அடுத்த படைப்பினை வெளியிட்டுள்ளது!
தனது இடி முழக்க சத்தத்திற்கும், அழகிய வடிவமைப்பிற்கு பெயர் போன Harley Davidson வண்டி தற்போது தனது புதிய வரவினை அறிமுகம் செய்துள்ளது. இந்த வாகனமானது தங்கம் முலாம் பூசப்பட்டு, வைரம் பொதிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை சேர்ந்த வாகன பிரியர்களிடையே இந்த வாகனத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழவில்லை. எனினும் வண்டியின் விலை மட்டுமே வாடிக்கையாளர்களின் வாயினை பிளக்க வைக்கிறது.
முதலாவதாக ஸ்வட்சர்லாந்தில் வெளியிடப்பட்டு இருக்கும் இந்த வண்டியின் விலையானது 1.5 மில்லியன் யூரோஸாக மதிப்பிடப்பட்டுள்ளது (இந்திய மதிப்பில் ரூ.12 கோடி ஆகும்). தற்போது இந்த வாகனம் தான் உலகின் விலை உயர்ந்த இருசக்கர வாகனமாகும்.
கருநீல நிறத்தில் கண்னை கவரும் இந்த இருசக்கர வாகனமானது, சுமார் 360 வைர கற்கலாலும், டசன் கணக்கிலான விலை மதிப்பற்ற கற்கலாலும் அழகுப் படுத்துப்பட்டுள்ளது. இந்த ஒரு வாகனத்தினை மட்டும் வடிவமைக்க சுமார் 2500 மணி நேரங்கள் தேவைப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.