ஹிலாரி கிளிண்டன் அமிதாப் பச்சன் பற்றி விசாரித்தார்
குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும் வரும் நவம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி இடுகின்றனர். ஹிலாரி கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை அமெரிக்க வெளியுறவு மந்திரியாக பதவி வகித்தார்.
நியூயார்க்: குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும் வரும் நவம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி இடுகின்றனர். ஹிலாரி கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை அமெரிக்க வெளியுறவு மந்திரியாக பதவி வகித்தார்.
ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு ஆதாரங்கள் அடங்கிய 33 ஆயிரம் இ-மெயில்களை அவர் நீக்கி விட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தற்போதைய ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திலும் எதிரொலித்து வந்தது.
ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் ஹிலாரியின் இ-மெயில் விவகாரம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இருப்பது, தேர்தலில் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. முன்னதாக இரு வேட்பாளர்களுக்கு இடையே நடத்தப்பட்ட நேரடி விவாதம் மற்றும் அதைத்தொடர்ந்து நடந்த கருத்துக்கணிப்புகள் அனைத்திலும் ஹிலாரியின் கையே ஓங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய நிலவரப்படி, ஒரு கருத்துக் கணிப்பின் ஹிலாரி கிளிண்டன் முன்னிலை வகிக்கிறார். இதனால் அமெரிக்க அதிபர் தேர்தல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.
இந்த இமெயில்களில் பலவற்றில் உள்ள விபரங்கள் வெளியே கசிந்துள்ளன. 2011 அன்று ஹிலாரிக்கும் ஹுமா அபைதினுக்கும் இடையில் நடைபெற்ற இந்த தகவல் பரிமாற்றத்தில், சில ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்தோமே அந்தப் புகழ்பெற்ற வயதான இந்திய நடிகரின் பெயர் என்ன என்று ஹிலாரி கேட்கிறார். அதற்கு பதில் மெயில் அனுப்பிய ஹுமா அபைதின், ‘அமிதாப் பச்சன்’ என்று தெரிவித்துள்ளார்.