ஹிலாரி கிளிண்டன் பூரண குணம்!!
நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஹிலாரி கிளிண்டன் பூரண குணமடைந்து விட்டதாக அவரது டாக்டர் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் 8-ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. அங்கு ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் தொழிலதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், நியூயார்க்கில் வர்த்தக மையம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நினைவு தினம் செப்டம்பர் 11-ம் தேதி கடைபிடிக்கப்பட்ட போது அதில் பங்கேற்ற ஹிலாரி கிளிண்டனும் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
அவருக்கு, நிமோனியா காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அவர் ஓய்வெடுத்து வருகிறார். அவரது பிரசார கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டன. ஹலாரி உடல் நலக்குறைவுடன் இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தின. இதனால், ஹிலாரி கிளிண்டன் தேர்தலில் வெற்றி பெற்றால் அதிபராக பணியாற்ற முடியுமா? என்ற விவாதங்கள் நடக்கின்றன.
இந்நிலையில், அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கூறியதாவது: ஹிலாரி கிளிண்டன் பூரண குணமடைந்துள்ளார். முழுமையாக பணியாற்றும் அளவிற்கு அவரது உடல் நிலை சீரடைந்துள்ளது. பிரசார கூட்டங்களில் விரைவில் அவர் பங்கேற்கலாம். அதிபராக தேர்ந்தெடுக்க பட்டால், சிறப்பாக பணியாற்றும் அளவிற்கு அவரது உடல் நிலை சீரடைந்துள்ளது என அவர் கூறினார்.