மனைவியை கொன்று சூட்கேஸில் பதப்படுத்தி வைத்ததாக ஹாங்காங் பல்கலை., பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹாங்காங் பல்கலை கழகத்தில் இயந்திரவியல் துறை பேராசிரியராக இருப்பவர் சியோங்கு கி சாங்(53). கடந்த 20-ஆம் தேதி வீட்டை விட்ட சென்ற இவரது மனைவி வீடு திரும்பவில்லை என காவல்துறையில் புகார் அளித்தார்.


இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் சியோங்கு கி சாங் கூறியது பொய் எனவும், அவரது மனைவி வீட்டை விட்ட வெளியேறியதற்கான ஆதாரங்கள் இல்லை எனவும் CCTV காட்சி உதவியுடன் காவல்துறை அறிந்துள்ளனர்.


இதனையடுத்து சியோங்கு கி சாங் உடமைகளில் சோதனை நடத்தப்பட்டது, அப்போது சியோங்கு கி சாங் சூட்கேசில் அவரது மனைவி கழுத்து அறுப்பட்ட நிலையில் ரத்த கரைகளுடன் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சியோங்கு கி சாங் தான் அவரது மனைவியின் இறப்பிற்கு காரணமாக இருக்க வேண்டும் என சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பாக ஹாங்காங் காவல்துறையினர் சியோங்கு கி சாங் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.