ரஷ்யா-உக்ரைன் போரினால் சிக்கலில் Zaporizhia அணுஆலை; IAEA கூறுவது என்ன!
ரஷ்யாவும் உக்ரைனும் சமீபத்தில் ஜபோரிஜ்ஜியா (Zaporizhia) அணுமின் நிலையத்திற்கு அருகில் ராக்கெட் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் நடப்பட்டதாக கூறியுள்ளன.
ரஷ்யா-உக்ரைன் போர் ஆறு மாத காலங்களாக வெற்றி தோல்வியின்றி நீடிக்கிறது. இது உலக அளவில் பண வீக்கத்தை அதிகரித்துள்ளது. எரி பொருள் விலை உயர்வு மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதில், குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் பெரிதும் பதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ரஷ்யாவும் உக்ரைனும் சமீபத்தில் ஜபோரிஜ்ஜியா (Zaporizhia) அணுமின் நிலையத்திற்கு அருகில் ராக்கெட் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் நடப்பட்டதாக கூறியுள்ளன. இந்த தாக்குதல்களால் கதிர்வீச்சு கசிவு அதிகரிக்கும் என்ற அச்சம் தீவிரமடைந்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், சர்வதேச அணுசக்தி முகமை நிபுணர்கள் விரைவில் அங்கு சென்ற பார்வையிடுவார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது
சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸ்ஸி திங்களன்று உக்ரைனின் ஜபோரிஜ்ஜியா (Zaporizhia) அணுமின் நிலையத்திற்கு அவரும் அவரது நிபுணர்களும் பார்வையிடப்போவதாக தெரிவித்தார். க்ரோஸி நீண்ட காலமாக தனது நிபுணர்கள் ஜபோரிஜ்ஜியா அணுமின் நிலையத்தைப் பார்வையிட அனுமதி கோரி வந்தார். உக்ரைனுடனான போர் தொடங்கிய உடனேயே, ரஷ்யப் படைகள் ஜபோரிஜ்ஜியா அணுமின் நிலையத்தைக் கைப்பற்றின என்பது குறிப்பிடத்தக்கது.
IAEA குழு மேற்கொள்ளும் ஆய்வு
13 நிபுணர்களுடன் தன்னைப் பற்றிய படத்தைப் பகிர்ந்து கொண்ட க்ரோஸி, 'உக்ரைனையும் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தையும் நாம் பாதுகாக்க வேண்டும். இந்த வார இறுதிக்குள் ஜபோரிஜ்ஜியா அணுமின் நிலையத்த்தை பார்வையிடும் இந்த பணியை வழிநடத்துவதில் நான் பெருமைப்படுகிறேன். ஆலைக்கு எந்த அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை நிபுணர்கள் ஆராய்வார்கள்’ என்று ட்வீட் செய்துள்ளார்.
மேலும் படிக்க | Quaternary Twins: அமெரிக்காவின் ‘மரபணு’ சகோதரர்கள்; வியக்கும் விஞ்ஞானிகள்!
அணுசக்தி ஆலை மீதான தாக்குதல்
இது தவிர, பாதுகாப்பு அமைப்புகளின் செயல்பாடுகளைக் கண்டறிந்து, அணுமின் நிலையை ஊழியர்களின் நிலையை மதிப்பீடு செய்வார். சமீபத்தில் இந்த அணுசக்தி ஆலையில் அல்லது அதற்கு அருகில் ராக்கெட் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் நடப்பட்டதாக கூறப்படும் நிலையில் தாக்குதல்களால் கதிர்வீச்சு கசிவு அதிகரிக்கும் என்ற அச்சம் தீவிரமடைந்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நிபுணர்கள் விரைவில் அங்கு பார்வையிடப்போகும் செய்தி மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
ரஷ்யா விடுக்கும் எச்சரிக்கை
மறுபுறம், Zaporizhia அணுசக்தி ஆலை தாக்குதல்களால் அணு உலை பேரழிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக இரு தரப்பினரும் கூறியுள்ளனர். எனினும் ஆலையை பார்வையிடுவதை இரு தரப்பினரும் எதிர்க்கின்றனர். ஆலையைக் கைப்பற்ற முயற்சிக்கும் ரஷ்யப் படைகள், ஞாயிற்றுக்கிழமை உக்ரைன் இராணுவத்தால் அனுப்பப்பட்ட ஆயுதமேந்திய ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்படும் என்று எச்சரித்துள்ளது.
பொதுவாக்கெடுப்பு நடத்தும் ரஷ்யா
இதனிடையில், உக்ரைனின் ஆக்கிரமிப்பு பகுதிகளை பொது வாக்கெடுப்பு நடத்தி இணைப்பதற்கான களத்தை ரஷ்யா தயார் செய்து வருகிறது. கிரெம்ளின் அதிகாரி செர்ஜி கியியென்கோ, ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பை மேற்கோள் காட்டி, கிழக்கு உக்ரேனிய பகுதிகளான Donetsk மற்றும் Luhansk, கூட்டாக Donbass என அழைக்கப்படும் என்றும் இப்பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதற்கு 91 சதவீத ஆதரவு உள்ளது என்றார்.
மேலும் படிக்க | Viral News: தன்னை கடித்த பாம்பை கடித்து குதறிய 2 வயது சிறுமி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ