சமீபகாலமாக ஆன்லைன் மார்க்கெட்டில் பழைய நாணயங்களுக்கு பயங்கரமாக டிமாண்டை உருவாகியுள்ளது.  பழைய நாணயங்கள், அரிய நாணயங்கள், பழைய நோட்டுகள் ஆகியவை ஆன்லைனில் ஆச்சர்யமூட்டும் விலைக்கு விற்பனையாகி வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், பழைய 50 பைசா நாணயம் ஒன்று 15000 ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் இங்கிலாந்தில் உள்ள கீவ் தோட்டத்தில் இருக்கும் சீன பகோடா பொறிக்கப்பட்டிருக்கும்.  கீவ் தோட்டம் தொடங்கப்பட்டு 250 ஆண்டுகள் நிறைவானதை குறிக்கும் வகையில் 210,000 நாணயங்கள் மட்டுமே வெளியிடப்பட்டது.



இந்த நாணயங்கள் புழக்கத்தில் இருந்தாலும் மிக அரிதானவை. எனவே, நாணங்களை சேகரிப்போர் இவற்றை குறிவைத்து தேடி வருகின்றனர்.  மிக அரிய நாணயம் என்பதால் இந்நாணயங்கள் அதிக விலைக்கு விற்பனையாகி வருகின்றன.


இந்நிலையில், eBay தளத்தில் இந்த 50 பைசா அரிய நாணயம் விற்பனைக்கு வந்தது. அப்போது 37 பேர் விலை கேட்டனர். சரியாக மூன்று நாட்களுக்கு ஏலம் நடைபெற்றது.  இறுதியில் 142 பவுண்டுக்கு (இந்திய மதிப்பில் சுமார் 15000 ரூபாய்) 50 பைசா நாணயம் விலை போனது. மேலும், அந்த அரிய நாணயத்தை விற்பவர் இலவசமாகவே டெலிவரி செய்வதாக தெரிவித்துள்ளார்.



உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR