நாடாளுமன்ற தேர்தல் தோல்வியினால் பின்னடைவை எதிர்நோக்கும் அதிபர் மேக்ரோன்
ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபர் பதவிக்கு கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில் இமானவேல் மேக்ரோன் வென்ற நிலையில், தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபர் பதவிக்கு கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில் இமானவேல் மேக்ரோன் வென்ற நிலையில், தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், இரண்டாம் கட்ட ஓட்டுப் பதிவு நேற்று நடந்தது. அதிபர் மேக்ரோனுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அறுதிப் பெரும்பான்மையை இழந்தார்.
மேக்ரோன் நாடாளுமன்ற கட்டுப்பாட்டை இழந்தது அவருக்கு ஒரு பெரிய பின்னடைவாகும். ஏனெனில் அது தேசத்தை அரசியல் முடக்கத்தில் தள்ளும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
நாடாளுமன்றத்தில், மொத்தமுள்ள, 577 இடங்களில், பெரும்பான்மைக்கு, 289 இடங்கள் தேவை என்ற நிலையில், மக்ரோனின் மத்திய-வலதுசாரிக் கட்சியினருக்கு 234 இடங்கள் மட்டுமே கிடைத்தன. புதிதாய் அமைக்கப்பட்ட இடது சாரி கட்சிக்கு 141 இடங்களும், வலதுசாரி தேசியப் பேரணிக் கட்சிக்கு 90 இடங்களும் கிடைத்தன.
மேலும் படிக்க | பிரான்ஸ் அதிபராக இமானுவேல் மேக்ரோன் மீண்டும் தேர்வு; உலக தலைவர்கள் வாழ்த்து
இப்போது, மக்ரோன் மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஒரு நிலையான கூட்டணியை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இறுதி முடிவுகளில், இடதுசாரி கூட்டணி மிகப்பெரிய எதிர்க்கட்சியாக மாறியுள்ளது. தீவிர வலதுசாரிகள் சாதனை அளவாக அதிக வெற்றிகளைக் கண்டுள்ளனர். தீவிர வலது சாரிகள் கிங்மேக்கர்களாக உருவெடுத்துள்ளனர். தேர்தல் முடிவுகள் "ஜனநாயக அதிர்ச்சி" என்று நிதியமைச்சர் புருனோ லு மைர் கூறினார். இந்த வகையான நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை எதிர்பார்க்கவில்லை என்றும் பிரான்ஸின் நிதியமைச்சர் கூறினார்.
மற்ற குழுக்கள் ஒத்துழைக்கவில்லை என்றால், "இதனால் பிரென்ஸ் நாட்டை சீர்திருத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை பெரிதும் பாதிக்கும்" என்று அவர் கூறினார்.
பிரதமர் எலிசபெத் போர்ன் இது குறித்து கூறுகையில், "நாங்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்களைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, இந்த முடிவினால், நாட்டிற்கு ஆபத்து" என்று கூறினார். திங்கட்கிழமை முதல், மக்ரோனின் முகாம் கூட்டணி உருவாக்குவது தொடர்ப்பாக பணிகளை மேற்கொள்ளும் என்று பிரதமர் மேலும் கூறினார். தொடர்ந்து முட்டுக்க்கடை ஏற்பட்டால், அதிபர் உடனடித் தேர்தலையும் நடத்தலாம் என்று கூறினார்.
மேலும் படிக்க | இலங்கையை போலவே சீனாவின் கடன் வலையில் சிக்கியுள்ள பாகிஸ்தான்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR