இந்தோனேசியா: உலகின் பல நாடுகளில் ஜனநாயகம் சிறந்த முறையில் பின்பற்றப்படுகிறது. மக்கள் தங்கள் இஷ்டப்படி வாழ்க்கை வாழ உரிமை உண்டு. இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் உள்ளது, மனதிற்கு பிடித்த மத்தை பின்பற்றவும், எங்கு வேண்டுமானாலும் வாழவும், யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்யவும் என அனைத்து விஷயத்திலும் சுதந்திரமாக வாழ் உரிமை உண்டு. ஆனால் உலகில் உள்ள சில நாடுகளில் சிறிய தவறுக்கும் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இஸ்லாமிய மத சட்டங்கள்


சில இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமிய மத சட்டங்கள் திவீரமாக கடைபிடிக்கப்படுகின்றன. இங்கு மக்களின் பல உரிமைகள் பறிக்கப்படுகின்றன. அதிலும் பெண்களுக்கு கல்வி, மனதிற்கு பிடித்த திருமணம், தனது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்தல் போன்ற அனைத்து உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. இந்த நாடுகளில் இந்தோனேசியாவும் அடங்கும். சமீபத்தில், இந்தோனேஷியாவில் நினைத்தாலே பகிர்  கிளப்பும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


காரில் காதலனும் காதலியும் முத்தமிட்டதால் கிடைத்த தண்டனை


இந்தோனேசியாவில் திருமணமாகாத காதல் ஜோடி ஒன்று காரில் முத்தமிட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் இதற்குப் பிறகு அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை மிகவும் கொடூரமானது. இதை அறிந்த அனைவரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். பார்க்கிங் மண்டலத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் காதலனும் காதலியும் முத்தமிட்டுக் கொண்டிருந்தனர். அப்போதுதான் அவர் இப்படி செய்வதை நிர்வாகத்தினர் பார்த்தனர். இதைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட்டார். அவர்கள் இருவரும் எல்லோர் முன்னிலையிலும் 21-21 முறை கசை அடி கொடுக்கப்பட்டது. கசை அடி என்பது இஸ்லாமிய நாட்டில் பொதுவாக கொடுக்கப்படும் தண்டனை ஆகும். கசையடி தண்டனை மிகவும் கொடூரமானது.  ஒன்று இரண்டு கசை அடி வாங்கினாலே எழுந்து நடக்க கூட முடியாத நிலை ஏற்பட்டு விடும். வலி உயிர் போகும் அளவிற்கு இருக்கும்.


மேலும் படிக்க | பெண்கள் இலவச பேருந்து பயணம்: கண்டக்டராகும் கர்நாடக முதல்வர்!


முன்னதாக 25 கசை அடிகள் தண்டனை கொடுக்க உத்தரவு 


இளைஞனின் வயது 24 மற்றும் பெண்ணின் வயது 23. சுமத்ரா தீவில் உள்ள புஸ்தானுல் சலாடின் வளாகத்தில் 21-21 என்ற கணக்கில் இந்த காதல் ஜோடிக்கு கசையடியால் தாக்கப்பட்டார். எல்லோர் முன்னிலையிலும் இவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது. ஆரம்பத்தில், அவருக்கு 25-25 கசையடிகள் விதிக்கப்பட்டன. ஆனால் பின்னர் அது 21 கசையடிகளாக குறைக்கப்பட்டது.


 சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் புகைப்படங்கள்


அதன் சில படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன, அவை நிலைமையின் பயங்கரமான காட்சியை நமக்கு எடுத்து கூறுகின்றன. சாட்டையால் அடிக்கப்பட்ட பிறகு, பாதிக்கப்பட்ட பெண் வலியால்  அலறிய படி தரையில் விழுவதை பார்க்க முடிந்தது. இந்த வழக்கை விசாரித்த பண்டா ஆச்சே வழக்கறிஞர் இது குறித்து கூறூகையில், இவர்கள் ஜினாயத் சட்டம் தொடர்பான 2014 ஆம் ஆண்டின் ஆச்சே சட்டத்தின் 6 ஆம் பிரிவு 25 இன் பத்தி-1 விதியை மீறியுள்ளனர். இது மனசாட்சியுடன் தொடர்புடையது. எனவே இதற்கு கடுமையான தண்டனை


திருமணத்திற்கு முன் முத்தமிடுவது உடலுறவு கொள்வதும் சட்டத்திற்கு புறம்பானது


இந்தோனேசியாவில் திருமணத்திற்கு முன்பு முத்தமிடுவது அல்லது உடலுறவு கொள்வது சட்டத்திற்கு புறம்பானது. இவ்வாறு செய்வது கண்டறியப்பட்டால், அவர் கடுமையாக தண்டிக்கப்படுவார். இருப்பினும், இந்த காதல் ஜோடிக்கு முன்பே, பலர் கொடூரமான சித்திரவதைகளுக்கு ஆளாகியுள்ளனர்.


மேலும் படிக்க | வரும் காலங்களில் ஒரு தமிழரையாவது பிரதமராக்க உறுதி எடுப்போம் - அமித்ஷா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ