பிரிட்டனில் AstraZeneca கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையை மீண்டும் தொடக்கியது..!!!
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து மேற்கொண்டு வந்த கொரோனா தடுப்பு மருந்து மீதான பரிசோதனையை, நிறுத்தியதாக அஸ்ட்ராஜெனெகா புதன்கிழமை அறிவித்தது.
கொரொனா தடுப்பு மருந்து பரிசோதனையில் பங்கேற்ற ஒருவருக்கு உடல நல குறைவு ஏற்பட்டத்தை தொடர்ந்து, இடைநிறுத்தப்பட்ட பரிசோதனை நடவடிக்கையை பின்னர் இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனையை அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) மீண்டும் தொடங்குகிறது
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து மேற்கொண்டு வந்த கொரோனா தடுப்பு மருந்து மீதான பரிசோதனையை, நிறுத்தியதாக அஸ்ட்ராஜெனெகா புதன்கிழமை அறிவித்தது.
இங்கிலாந்தில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையில் பங்கேற்ற ஒருவர் நோய்வாய்ப்பட்டதால், அது தொடர்பான அனைத்து விஷயங்களையும் தெளிவுபடுத்திய பின்னர், கோவிட் -19 தடுப்பூசி பரிசோதனையை மீண்டும் தொடங்கியுள்ளதாக பார்மா நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
"அஸ்ட்ராஜெனெகா ஆக்ஸ்போர்டு கொரோனா வைரஸ் தடுப்பூசி, AZD1222 க்கான மருத்துவ பரிசோதனைகள் இங்கிலாந்தில் மீண்டும் தொடங்கியுள்ளன. மருந்துகள் சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் (MHRA), இந்த மருத்து பரிசோதனை பாதுகாப்பானது என உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது” என நிறுவனம் தெரிவித்தது.
தடுப்பு மருந்து தொடர்பான பரிசோதனையின் பாதுகாப்பை மறுஆய்வு செய்வதற்கு ஒரு சுயேச்சை குழு அமைக்கப்பட்டது. அக்குழு பரிசோதனையில் பங்கேற்றவருக்கு ஏற்பட்ட பாதிப்பு என ஆராய்ந்தது
இந்த குழு "தனது விசாரணைகளை முடித்து, இங்கிலாந்தில் சோதனைகள் மீண்டும் தொடங்குவது பாதுகாப்பானது என்று MHRA க்கு பரிந்துரைத்துள்ளது" என்று அஸ்ட்ராஜெனெகா கூறினார்.
அஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பு மருந்து தற்போது 3-வது கட்ட மனித சோதனை நிலையில் உள்ளது.
அமெரிக்காவில், நிறுவனம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி பலவேறு தளங்களில், 30,000 தன்னார்வலர்களை இந்த பரிசோதனை நடவடிக்கையில் இணைக்க தொடங்கியது, மேலும் பிரேசில் மற்றும் தென் அமெரிக்காவின் பிற இடங்களில் சிறிய அளவில் தடுப்பூசி பரிசோதனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க | கொரோனா வைரஸ் பெண்கள் மற்றும் ஆண்களை வித்தியாசமாக பாதிக்கிறதா?
AZD1222 தடுப்பு மருந்து, பொதுவான சளி காய்ச்சலில் பயன்படுத்தப்படும் மருந்தின் வீரியம் குறைந்த அளவை, பயன்படுத்தி கோவிட் -19 கொரோனா வைரஸ் செல்களை கட்டுப்படுத்தக்கூடிய ஸ்பைக் ப்ரோட்டீனை உருவாக்குவது குறித்து ஆராய்ச்சி செய்யப்படுகிறது.
தடுப்பு மருந்து கொடுக்கப்பட்ட பிறகு, இந்த புரதம் மனித உடலுக்குள் உற்பத்தி செய்யப்படுகிறது, இது பின்னர் நோய்த்தொற்று ஏற்பட்டால் கொரோனா வைரஸைத் தாக்கும் நோயெதிர்ப்பு மண்டலத்தை இது உருவாக்குகிறது
"நிறுவனம் உலகெங்கிலும் உள்ள சுகாதார அதிகாரிகளுடன் தொடர்ந்து பணியாற்றுகிறது, மேலும் இந்த தொற்றுநோய் பரவலை தடுக்க, தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்கும் வகையில், லாப நோக்கில்லாமல் வழங்க பணியாற்றி வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | மிட்நைட்டிற்கு அப்புறம் தூங்குபவரா நீங்க, அப்படீன்னா இதை கண்டிப்பா படிங்க..!!!