கனடா தூதர் வெளியேற ஆணை! பதிலடி கொடுக்கும் இந்தியா! விரிசலைடையும் உறவுகள்
India expel senior Canadian diploma: `இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள்` தொடர்பாக கனடாவின் உயர்மட்ட தூதரக அதிகாரியை புதுடில்லி வெளியேற ஆணை பிறப்பித்துள்ளது
புதுடெல்லி: காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் தொடர்பற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், கனடாவிலுள்ள இந்திய தூதரை நாட்டை விட்டு வெளியேறுமாறு அந்நாடு உத்தரவிட்ட சில மணி நேரங்களிலேயே, கனடாவின் மூத்த தூதரக அதிகாரியை அடுத்த 5 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. "இந்தியாவிற்கான கனடா உயர் கமிஷனர் இன்று வரவழைக்கப்பட்டு, இந்தியாவை தளமாகக் கொண்ட கனடா நாட்டின் மூத்த தூதரக அதிகாரியை வெளியேற்றும் இந்திய அரசின் முடிவு குறித்து தெரிவிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட தூதர் அடுத்த ஐந்து நாட்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்" என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.
ஜூன் 18 அன்று சீக்கிய கலாச்சார மையத்திற்கு வெளியே சுட்டுக்கொல்லப்பட்ட சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் படுகொலையில் அவருக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டின் பேரில் ஒரு உயர்மட்ட இந்திய தூதரக அதிகாரியை கனடா வெளியேற்றிய ஒரு நாளுக்குப் பிறகு, புதுதில்லியில் இருந்து கனடா நாட்டு தூதரக அதிகாரியை வெளியேற்ற உத்தரவிடப்பட்டது.
காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜரை இந்திய அரசு கொன்றது என்ற கனடா பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது. கனடா அரசின் இந்த குற்றச்சாட்டு, அடிப்படை ஆதரமற்றது என்று இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் தேடப்பட்டு வந்த நிஜ்ஜார், ஜூன் 18 அன்று, கனடாவின் சர்ரேயில் உள்ள குருத்வாராவிற்கு வெளியே வாகன நிறுத்துமிடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மேலும் படிக்க | வேருடன் அழிக்கப்படுவார்கள்... காலிஸ்தானி தீவிரவாதம் குறித்து ரிஷி சுனக்!
இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் கனடாவுக்குச் சென்ற நிஜ்ஜார், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தீவிரவாதி என்று இந்திய அரசால் அறிவிக்கப்பட்டார். சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு காலிஸ்தான் என்ற பெயரில் இந்தியாவின் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் என சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் மாகாணங்களை இணைத்து தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கைகள் நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வருவதாகும். இந்த குறிக்கோளுடன் ஜர்னையில் சிங் பிந்தரன்வாலா காலிஸ்தான் இயக்கம் உருவாக்கப்பட்டது.
காலிஸ்தான் விடுதலைக்காக போராடிய இவர், இந்தியாவில் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான KTF எனப்படும் காலிஸ்தான் புலிகள் படைக்கு ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி அளிப்பதில் நிஜ்ஜார் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். அவர் கொல்லப்பட்டபோது, இந்தியாவில் சுதந்திர சீக்கிய தேசம் வேண்டும் என்பதற்காக அதிகாரப்பூர்வமற்ற பொது வாக்கெடுப்ப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
"இந்தியாவின் உள் விவகாரங்களில் கனடா தூதர்களின் தலையீடு மற்றும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுவது குறித்து இந்திய அரசின் வளர்ந்து வரும் கவலையை இந்த முடிவு பிரதிபலிக்கிறது" என்று கூறப்படுகிறது.
இந்தியாவுக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் கேமரூன் மேக்கே, திங்கள்கிழமை காலை புது தில்லியில் உள்ள ரைசினா ஹில்லின் சவுத் பிளாக்கில் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அழைப்பை ஏற்று சென்றிருந்தபோது, அவரிடம் செய்தியாளர்கள் கேள்விக்கணைகளை முன்னெடுத்தனர்.
இந்தியா-கனடா உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இது என்று கூறப்படுகிறது. புதுதில்லியில் உள்ள கனடா நாட்டுத் தூதுவர் இந்த ஆண்டு பாகிஸ்தான் தூதர்களை விட அதிக முறை அழைக்கப்பட்டுள்ளார் என்று தெரிகிறது.
மேலும் படிக்க | சான் பிரான்சிஸ்கோ இந்திய தூதரகத்திற்கு தீவைப்பு! காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டகாசம்
இந்திய அரசால் கனடா மண்ணில் ஒரு படுகொலை நிகழ்த்தப்பட்டதாக அந்த நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆதாரங்களை ஜி20 மாநாட்டிற்கு வந்தபோது கொடுத்துள்ளதாக கனடா பிரதமர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், கனடா பிரதமரின் கூற்றை மறுத்து கண்டனம் தெரிவித்துள்ள இந்திய அரசு, கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தை சேர்ந்த ஒரு அதிகாரியை வெளியேற உத்தரவிட்டுள்ளது.
கனடாவின் பிரதமர் கூறியது உண்மை என்றால், இதற்கான ஆதாரங்களை பொது வெளியில் வெளியிடவேண்டும். அதைப்போலவே இந்தியப் பிரதமரிடம் கொடுக்கப்பட்டுள்ள ஆதாரங்களையும் அவர் பொதுவெளியில் வைக்கவேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. இது ஒரு உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல, 140கோடி இந்திய மக்களின் நிலைப்பாடு சார்ந்தது என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளன..
பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் கொல்லப்பட்ட ஹர்தீப் சிங் நிஜார் உண்மையில் குற்றவாளி எனில் இந்திய அரசு முறைப்படியான ஆதாரங்களை கொடுத்து சர்வதேச சட்டங்களின்படி இந்தியாவிற்கு கொண்டுவந்து விசாரணைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும் என்றும், அந்நிய மண்ணில் கொலைகளை செய்வது இந்தியா “எல்லை கடந்த பயங்கரவாதம்” குறித்து பேசுவதற்கான தார்மீக உரிமையை இழந்துவிடும் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.
மேலும் படிக்க | கவுண்டி தொடரில் விளையாட புஜாராவுக்கு தடை! இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ