ஆப்கானிஸ்தானில் (Afghanistan) இருந்து அமெரிக்கப் படைகளை ஆகஸ்ட் மாதம் 31ம் தேதிக்குள் முழுமையாக திரும்ப பெறப்படும் என கடந்த வாரம் அமெரிகக் அதிபர் ஜோ பைடன் ( Joe Biden) அறிவித்தார். இதனை அடுத்து ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் மிக வேகமாக வெளியேறி வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், முன்னதாக, ஆப்கானிஸ்தானின் 85 சதவீத பகுதிகள் தங்கள் கட்டுபாட்டில் வந்து விட்டதாக அறிவித்த தலிபான்கள், மேலும் பல பகுதிகளை கட்டுப்பட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்பதை நோக்கமாக கொண்ட தாலிபானின் அறிவிப்பை அடுத்து, பாதுகாப்பு நிலை மோசமடைந்து வரும் நிலையில் கந்தகாரில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால்,  இன்னும் தூதரகம் செயல்பட்டு வருவதாக தெரிவித்த தூதரக வட்டார அதிகாரிகள், பாதுகாப்பு காரணம் கருதி, இந்திய திபெத் எல்ல காவல் படை ஊழியர்கள் உட்பட  சில தூதரக ஊழியர்கள் சுமார் 50 பேரை, இந்தியா திரும்ப அழைத்து வரை, இந்திய விமான படையின் சிறப்பு விமானம் காந்தஹார் அனுப்பப்பட்டாதாக தெரிவித்தனர்.


ALSO READ | Pakistan: வரலாறு காணாத கடும் வறட்சியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான்


கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம்தேதி நியூயார்க் நகரில் அல்கொய்தா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி அல்கொய்தா பயங்கரவாதிகள் மற்றும் தலிபான்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தன. பெரு முயற்சிக்கு பிறகு தலிபான்கள் விரட்டப்பட்டு ஜனநாயக அரசு அமைக்கப்பட்டது.  ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதம் முடிவுக்கு வந்ததாக கூறிய அமெரிக்கா, தங்களது படை வீரர்களைத் திரும்பப் பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.


இந்த நிலையில் ஆப்கானிஸ்தானை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் தீவிர முயற்சியில் தலிபான்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது உலக நாடுகளுக்கு கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது.


ALSO READ | Twitter-க்கு போட்டியாக GETTR; டொனால்ட் டிரம்ப் குழுவின் புது சமூக ஊடக தளம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR