அமெரிக்காவில் கன்சாஸ் மாகாணத்தில் ஒலாதே நகரில் மதுபாரில் இனவெறியால் ஐதராபாத்தை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் குச்சிபோத்லா என்ற என்ஜினீயர் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொரு இந்திய என்ஜினீயர் அலோக் மதசானி படுகாயத்துடன் உயிர் பிழைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்க கடற்படை முன்னாள் வீரர் புரின்யான் என்பவர் துப்பாக்கியால் சுட்டார். அவர் சரமாரி சுட்ட போது அவர்களுடன் இருந்த அமெரிக்கர் இயன் கிரில்லாட் என்பவர் குறுக்கே பாய்ந்து துப்பாக்கி சூட்டை தடுத்தார். இதனால் அவரது உடலிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. எனவே அமெரிக்கர் இயன் கிரில்லாட்டுக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் பாராட்டு விழா நடத்தினார்கள்.


ஹுஸ்டனில் வாழும் அமெரிக்கவாழ் இந்தியர்கள் இதற்கான ஏற்பாட்டை செய்திருந்தனர். அவர்கள் அனைவரும் 1 லட்சம் டாலர் நிதி சேகரித்தனர். சமீபத்தில் ஹுஸ்டன் இந்தியா இல்லத்தில் 14வது ஆண்டு விழா நடந்தது. அதில் இயான் கிரில்லாட்டுக்கு ரூ.65 லட்சம் பரிசு தொகையை அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நல்தேஜ் சர்னா வழங்கினார். மேலும் உண்மையான அமெரிக்க ஹீரோ என்ற புகழாரம் சூட்டப்பட்டது.