கொழும்பு: இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA), தடைசெய்யப்பட்ட கஞ்சா-வினை கடத்த முயன்றதாக இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஞாயிறு அன்று நிகழ்ந்த இச்சம்பவத்தில், பெங்களூருவில் இருந்து இலங்கை பயணம் மேற்கொண்ட 30 வயது இந்திய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டாரநாயக்க விமான நிலயத்தில், பரிசோதனை செய்யப்பட்ட போது இவரின் உடமையில் இருந்து சுமார் 2 கிலோ தடைசெய்யப்பட்ட கஞ்சா (hashish) கைப்பற்றப்பட்டுள்ளது. பின்னர் இவர் இலங்கை காவல்துறையின் நார்கோடிக்ஸ் பீரோ அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் விலை சுமார் 20 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.


கடத்தல் தடுப்பு பிரிவு சட்டதின் கீழ் கைது செய்யப்பட்ட இவர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுகின்றார்.