அமெரிக்காவில் கடும் குளிரினால் இறந்த இந்திய மாணவர்... வெளியான அதிர்ச்சி தகவல்
அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய வம்சாவளி மாணவரான அகுல் தவன், கடந்த ஜனவரி 20ஆம் தேதி அன்று கடும் குளிர் காரணமாக இருந்தார்.
அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய வம்சாவளி மாணவரான அகுல் தவன், கடந்த ஜனவரி 20ஆம் தேதி அன்று கடும் குளிர் காரணமாக இருந்தார். 18 வயதான அவரது மரணம் தொடர்பாக, தற்போது அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. சம்பவம் நடந்த தேதியன்று, அகுல் தவன் தனது நண்பர்களுடன் ஒன்றுக்கு சென்றதாகவும், அங்கே அகுல் தவனுக்கு கிளப்பிற்குள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை என்றும், அதன் காரணமாக கடும் குளிரில் வெளியே இருந்ததால், குளிரில் உறைந்து இறந்தார் என்றும் கூறப்படுகிறது. அகுல் தவன் இறந்து கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்குப் பிறகு இந்த தகவல் வெளியாகி உள்ளது.
இரவு கிளப்பிற்குள் நுழைய அனுமதி மறுப்பு
அகுல் தவன் பலமுறை இரவு கிளப்பிற்குள் நுழைய முயன்ற போதும் ஊழியர்கள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை என்பது, அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. அப்பகுதியில் அன்றைய இரவு வெப்பநிலை மைனஸ் 2.7 டிகிரி. மறுநாள் காலை அக்குள் ஒரு கட்டிடத்தின் பின்னால், இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது.
மாணவர் மரணம் தொடர்பாக போலீசார் வெளியிட்ட தகவல்
சம்பவம் குறித்து விசாரணை செய்த போலீசார், மாணவர் மரணம் அடைந்ததற்கான காரணம், அதிக மதுபானம் அருந்திய நிலை, மற்றும் அதிக நேரம் குளிரில் அது என குறிப்பிட்டனர். எனினும், அகுலின் மரணம் குறித்து, அவரது குடும்பத்தினர் காவல் துறைக்கு ஒரு சிறந்த மடல் ஒன்றை எழுதி பல கேள்விகளை எழுப்பினர்.
அகுலின் குடும்பத்தினர் போலீசாரிடம் எழுப்பிய கேள்வி
அகுல் காணாமல் போன 10 மணி நேரத்திற்கு பிறகு உடல் கண்டுபிடிக்கப்பட்டது என்றும், விரைந்து செயல்பட்டிருந்தால் அவரை உயிருடன் மீட்டு இருக்கலாம் என்று தெரிவித்தனர். அவர் காணாமல் போன இடத்திற்கும், அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கும் இடையே வெறும் 200 அடி மட்டுமே இருந்த நிலையில், போலீசார் சரியான நேரத்தில் செயல்பட்டிருந்தால், தனது மகனைக் காப்பாற்றி இருக்கலாம் என்று கூறினர்.
கலிபோர்னியாவில் வசிக்கும் அகுலின் பெற்றோர்
அகுல் தவனின் பெற்றோர் கலிபோர்னியாவின், சான் பிரான்சிஸ்கோ பகுதியில் வசிக்கின்றனர். காணாமல் போனவர்களை தேடுவது தொடர்பான நெறிமுறைகளை பின்பற்றவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
போலீஸார் பின்பற்றிய நெறிமுறைகள் குறித்து காவல்துறையிடம் கேள்வி
இந்திய - அமெரிக்க மாணவரின் பெற்றோர், தேடுதல் நடவடிக்கையின் போது, போலீஸார் பின்பற்றிய நெறிமுறைகள் குறித்து காவல்துறையிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அகுல் தவானின் பெற்றோர்கள் இரவு விடுதி அருகே எந்த தேடுதலும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், பல்கலைக்கழக போலீசார் காணாமல் போனவர்களை தேடுவது தொடர்பான நெறிமுறைகளை பின்பற்றவில்லை என்றும் இல்லினாய்ஸ் பல்கலைக்கழக காவல்துறை அலட்சியமாக இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
அமெரிக்காவில் படித்து வரும் இந்திய மாணவர்களின் மர்ம மரணங்கள்
அமெரிக்காவில் படித்து வரும் இந்திய மாணவர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பது அதிர்ச்சிடைய செய்கிறது. இவை தவிர, இந்த வருடத்தில் மூன்று இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். பர்டூ பல்கலைகலைக்கழத்தில் படித்து வந்த நீல் ஆச்சார்யா என்ற மாணவர், ஜார்ஜியாவில் உள்ள லிதோனியாவில் அரியானாவைச் சேர்ந்த விவேக் சைனி, அமெரிக்காவின் ஒஹியோவில் இந்திய மாணவர் ஷ்ரேயாஸ் ரெட்டி ஆகியோர் இறந்து விட்டனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ