அமெரிக்காவில் நடை பெற்ற 2017-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அமெரிக்கா அழகி போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஷைனி வெற்றி பெற்றுள்ளார். 2017-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அமெரிக்கா அழகி போட்டி அமெரிக்காவில் நடை பெற்றது. இதில்,வாஷிங்டன் பல்கலை கழகத்தின் 21 வயது மாணவியான ஸ்ரீ சைனி வெற்றி பெற்றுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவில் மிஸ் இந்தியா அமெரிக்கா, மிஸ் டீன் இந்தியா அமெரிக்கா, மிஸஸ் இந்தியா அமெரிக்கா என 3 பிரிவுகளில் 2017ம் ஆண்டிற்கான அழகி போட்டி நடந்தது.  இதற்காக 24க்கும் கூடுதலான மாநிலங்களில் இருந்து 50 போட்டியாளர்கள் பங்கேற்றனர். 


இதில் இந்தியாவை சேர்ந்த ஷைனி வெற்றி பெற்றுள்ளார். இவரது பெற்றோர்கள் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலிருந்து  அமெரிக்காவுக்கு வசிப்பிடம் தேடி சென்றவர்களாவார்கள். 


இது தொடர்பாக அவர்கள் கூறுகையில்;- ஸ்ரீ சைனிக்கு 12 வயதில் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டு அவரால்  நடனமாட முடியாது  என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவருடைய ஊக்கம் அவரை வெற்றி பெற செய்திருக்கிறது. என்றனர்.


மேலும் இந்த போட்டியில் 22 வயது நிறைந்த மருத்துவ மாணவியான கனெக்டிகட்டை சேர்ந்த பிராச்சி சிங் 2வது இடமும், வடகரோலினாவை சேர்ந்த பரீனா 3வது இடமும் பெற்றறுள்ளனர்.


இதேபோன்று மிஸஸ் இந்தியா அமெரிக்கா 2017 போட்டியில் புளோரிடாவை சேர்ந்த புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணரான கவிதா மல்ஹோத்ரா பட்டானி வெற்றி பெற்றுள்ளார்.  2வது இடத்தினை பிரேர்ணா மற்றும் 3வது இடத்தினை ஐஸ்வர்யா பெற்றுள்ளது. குறிபிடத்தக்கத்து.