இந்தியா வளர்ச்சி விகிதம் உயரும்: உலக வங்கி தகவல்!!
2018-ம் ஆண்டு இந்தியா 7.3 வளர்ச்சி இலக்கை அடையும் என உலக வங்கி ஆய்வறிக்கையில் தகவல் வெளியிட்டுள்ளது.
2018-ம் ஆண்டு இந்தியா 7.3 வளர்ச்சி இலக்கை அடையும் என உலக வங்கி ஆய்வறிக்கையில் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவி்ல் நோட்டுஒழிப்பு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு உள்ளிட்ட காரணங்களால் 2017-ல் வளர்ச்சி விகிதம் 6.7 சதவீதமாக இருந்தது. தற்போதைய நிலவரப்படி 2018-ம் ஆண்டில் இது 7.3 சதவீதமாகவும் அடுத்த இரண்டு ஆண்டுகளி்ல் 7.5 சதவீத உயருவதற்கு சாத்தியம் உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து உலக வங்கியின் மேம்பாட்டு இயக்குனர் அஹான் கோஸ் கூறுகையில், இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் அடுத்த 10 ஆண்டுகளில் குறிப்பாக 2018 ஆம் ஆண்டில் அதிக வளர்ச்சி விகிதத்தை எட்டும் என்றார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, போக்குவரத்து மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இந்தியா தனது முதலீட்டை அதிகரித்து வருவதாகவும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பதை உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அமைப்புகள் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் 2018ம் ஆண்டு இந்தியா 7.3 சதவிகித வளர்ச்சி இலக்கை அடையும் என்று உலக வங்கி ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.