இந்தோனேஷியாவின் லோம்போக் தீவு பகுதியில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 7 ஆக பதிவு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தோனேசியாவின் முக்கியச் சுற்றுலாத் தளங்களில் ஒன்றான லாம்பாக் தீவில் இன்று காலை உள்ளூர் நேரப்படி 6.07 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவாகியுள்ள நிலநடுக்கதால் சேதம் அதிகளவில் இருக்கக் கூடும் என எதிர்ப்பாக்கப்படுகிறது. இங்கு, 3,19,000 மக்கள் வசித்து வருகின்றனர். 


லாம்பாக் தீவு பகுதியில் 7 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்புள்ளி அமைந்திருந்தது. நிலநடுக்கத்தின் மையப்புள்ளி கடலில் இல்லாததால், சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்டதற்கு பின்னரும் நில அதிர்வு இருந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர். 


ANI தகவலின் படி, ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆகப் பதிவாகியிருக்கிறது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. மீட்பு குழுவினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். 



நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின, இதனால் மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.