ஈரான் தனது இராணுவம் "தற்செயலாக" ஒரு உக்ரேனிய ஜெட்லைனரை சுட்டதாக அறிவித்துள்ளது. இந்த கோர விபத்தில் 176 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனிக்கிழமை காலை வெளியான இதுதொடர்பான அறிக்கை இந்த சம்பவத்திற்கு "மனித பிழை" என்று குற்றம் சாட்டியுள்ளது. மேலும் Flight 752-னை "விரோத இலக்கு" என்று இராணுவம் தவறாகக் கருதியதாக குறிப்பிட்டுள்ளது.


ஒரு "முக்கியமான இராணுவ தளத்திற்கு" அருகில் Flight 752 பறந்ததாகவும், இதன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாகவும் ஈரானின் ஆயுதப் படைகளின் பொதுப் பணியாளர்கள் மேற்கொள் காடியுள்ளதாக உள்ளூர் ஊடங்கங்கள் தெரிவித்துள்ளன.



மேலும் அமெரிக்காவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் ஈரான் இராணுவம் "மிக உயர்ந்த தயார் நிலையில்" இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. இத்தகைய பதற்றமான நிலயைல் உக்ரேனிய விமானத்தை மனித பிழையின் காரணமாக, ஈரான் இராணுவம் தாக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தங்களது செயல்பாடுகளுக்கு வருத்தம் தெரிவித்ததுடன், எதிர்கால துயரங்களைத் தடுக்க அதன் அமைப்புகளை மேம்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளது.


சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி, "இந்த பேரழிவுகரமான தவறுக்கு நாடு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.


மேலும் அவர் தெரிவிக்கையில்., "எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் விபத்தில் பலியானோர் குடும்பத்தினர் அனைத்திற்கும் செல்கின்றன. எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று  குறிப்பிட்டுள்ளார். மேலும், "இந்த பெரும் சோகம் மற்றும் மன்னிக்க முடியாத தவறை விசாரணைகள் மூலம் ஆழ்ந்து கண்டறிந்து வழக்குத் தொடரப்படும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதனிடையே, ஈரானின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் அலி அபெட்ஸாதே வெள்ளிக்கிழமை ஈரானின் வான் பாதுகாப்புக்கும் சிவில் விமானத் துறைக்கும் இடையிலான நெருக்கமான ஒருங்கிணைப்பால் சாத்தியமில்லை என்று கூறினார்.


மேலும், தெஹ்ரானில் செய்தியாளர்களிடம் பேசிய அபெட்ஸாதே, "எங்களுக்கு வெளிப்படையானது என்னவென்றால், எந்த ஏவுகணையும் விமானத்தைத் தாக்கவில்லை என்பதே நாம் உறுதியாகக் கூற முடியும். ஈராக்கில் அமெரிக்கப் படைகள் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, உக்ரைன் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸால் இயக்கப்படும் போயிங் 737 விமானம் டெஹ்ரானின் புறநகரில் இறங்கியது." என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


உக்ரைன் தலைநகருக்குச் சென்ற  இந்த விமானம் 82 ஈரானியர்கள், குறைந்தது 63 கனடியர்கள் மற்றும் 11 உக்ரேனியர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 167 பயணிகளையும் ஒன்பது பணியாளர்களையும் ஏற்றிச் சென்றது குறிப்பிடத்தக்கது.