ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ஒன்பது பேர் மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இப்போது உலகளாவிய தொற்றுநோயின் வடிவத்தை எடுத்துள்ளது. பலரை காவு வாங்கியுள்ள இந்த கொரோனோ வைரஸை உலக சுகாதார நிறுவனம் இன்னும் ஒரு தொற்றுநோயாக அறிவிக்கவில்லை என்றாலும், நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது.


கொரோனவை கட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று சீனா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமாக போராடி வருகின்றன. ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர், மக்காவ், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 28-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது.


இந்நிலையில் தற்போது ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ஒன்பது பேர் மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.