ஈரானில் வலுக்கும் போராட்டம்: காவல் நிலையம் மீது பயங்கர தாக்குதல்
Iran: ஆர்ப்பாட்டக்காரர்கள் வெள்ளிக்கிழமை ஈரானில் ஒரு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்த வன்முறை சம்பவத்தில் இஸ்லாமிய புரட்சிக் காவலர் படையின் புலனாய்வுப் பிரிவின் தளபதி அலி மௌசவி உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர்.
ஈரான் சமீபத்திய செய்திகள்: ஹிஜாபிற்கு எதிராக நடந்து வரும் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில், ஈரான் அரசு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் வெள்ளிக்கிழமை ஈரானில் ஒரு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்த வன்முறை சம்பவத்தில் இஸ்லாமிய புரட்சிக் காவலர் படையின் புலனாய்வுப் பிரிவின் தளபதி அலி மௌசவி உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தீவிரவாத தாக்குதல் என ஈரான் அரசு அறிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மாகாண ஆளுநர் ஹொசைன் மொடரேஸ் கியாபானி தெரிவித்துள்ளார்.
காவல் நிலையம் மீது பயங்கர தாக்குதல்
வெள்ளிக்கிழமையன்று ஈரானில் பயங்கரவாத மற்றும் பிரிவினைவாத குழுக்களைச் சேர்ந்த சில போராட்டக்காரர்கள் வெள்ளிக்கிழமை தொழுகை என்ற போர்வையில் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தியதாகவும், காவல் நிலையத்தின் மீது கற்கள் மற்றும் தீப்பற்றக்கூடிய பொருட்களை வீசியதாகவும் ஹொசைன் மோடரேஸ் கியாபானி கூறினார். காவல் நிலையத்தைக் கைப்பற்ற துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர்
மாகாண தலைநகர் சஹேதானில், நடந்த இந்த சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்ததாகவும், போலீஸ் படையைச் சேர்ந்தவர்கள் உட்பட 20 பேர் காயமடைந்ததாகவும் கூறினார். தாக்குதல் நடத்தியவர்கள் செயின் ஸ்டோர்கள், கடைகள் உட்பட பொது சொத்துக்களுக்கு தீ வைத்தனர். வங்கிகள் மற்றும் அரசாங்க மையங்களையும் சூறையாடினர்.
மேலும் படிக்க | தலைமுடியை வெட்டிப் போராடும் பெண்கள் : பற்றி எரியும் ஈரான்
கைது வரை மோதல் நீடித்தது
மாகாண ஆளுநர் ஹொசைன் மோடரேஸ் கியாபானி, தாக்குதல் நடத்தியவர்களுக்கு ராணுவமும் காவல்துறையும் சரியான பதிலை அளித்ததாகவும், அனைவரையும் கைது செய்யும் வரை மோதல் தொடர்ந்ததாகவும், தற்போது தனது மாகாணம் அமைதியாக இருப்பதாகவும் கூறினார்.
காவல் நிலையம் மீதான தாக்குதலுக்குப் பிறகு, ஒரு மசூதிக்கு அருகில் ஆயுதம் ஏந்திய குழு ஒன்று கூடி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ப்ரெஸ் டிவி தெரிவித்துள்ளது. இந்த மோதலில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவலர் படையின் புலனாய்வுப் பிரிவின் தளபதி அலி மௌசவி மோதலில் கொல்லப்பட்டார்.
மேலும் படிக்க | பிரிட்டனில் புதிய சகாப்தம் தொடங்கியது: நாணயங்களில் ஏற்படும் மாற்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ