தெஹ்ரான்: ஈரான் பாராளுமன்றத்தில் மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கொமேனி வழிபாட்டுத்தலத்தின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஈரான் பாராளுமன்றத்தில் மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கொமேனி வழிபாட்டுத்தலத்தின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். 


இந்த செய்தியை மெஹர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், ''நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த மர்ம நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் நாடாளுமன்றத்துக்கு பார்வையாளர்களாக வந்திருந்த இருவர் மற்றும் ஒரு பாதுகாப்பு அதிகாரி காயமடைந்தனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஈரான் பாராளுமன்றத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் எம்.பிக்களை பிணைக் கைதிகளாக சிறைபிடித்துள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மர்ம நபர்களுக்கும் ஈரான் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் ஈரான் பாராளுமன்றத்துக்குள் ஆயுதம் தாங்கிய மர்ம நபர்கள் கும்பல் இன்று அதிரடியாக உள்ளே நுழைந்தது. துப்பாக்கி முனையில் எம்பிக்கள் சிலரையும் பிணைக் கைதிகளாக அந்த கும்பல் சிறை பிடித்தது. 


இதையடுத்து எம்பிக்களை மீட்க ஈரான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 


இதனிடையே தெஹ்ரானில் வழிபாட்டுத் தலம் ஒன்றிலும் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


 



 



 



 



 



 



 



மேலும் ஏகே 47 ரக துப்பாக்கியை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக எம்.பி. கூறிஉள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.