தெஹ்ரான்: இஸ்லாமிய குடியரசிற்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நலன்களுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும் என்றும் அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ஈரான் ராணுவம் அமெரிக்காவை எச்சரித்த்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஆண்டு ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா ஈரான் படையை கருப்பு பட்டியலில் சேர்த்தது. ஈராக் நாட்டுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் அமெரிக்கா, அந்நாட்டுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது. மேலும் ஈராக் மீது போர் தொடுக்க போவதாக மிரட்டி வருகிறது. 


சமீபத்தில் ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு காரணம் ஈரான்தான் எனக்கூறி மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கு கூடுதலாக ஆயிரம் ராணுவ வீரர்களை அமெரிக்கா அனுப்பி வைத்தது. இதனால் ஆத்திரம் அடைந்துள்ள ஈரான், அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி யுரேனியத்தை செறிவூட்டும் பணிகள் விரைவில் தொடங்கும் என பகிரங்கமாக அறிவித்துள்ளது. 


இதனையடுத்து எங்கள் நாட்டின் ஹோர்மஸ்கான் வான்பரப்பில் அனுமதியின்றி நுழைந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது அமெரிக்கா.


இதனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஈரான் மிகப் பெரிய தவறு செய்து விட்டது என பதிவிட்டிருந்தார். மேலும் ஈரான் அமெரிக்காவில் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதையடுத்து நாங்கள் 3 இடங்களில் தாக்குதல் நடத்த திட்டம் போட்டோம். ஆனால் மக்கள் அதிக அளவில் பலியாவார்கள் எனத் தெரிந்ததால் கடைசி நிமிடத்தில் போர் நிறுத்த உத்தரவிட்டேன் என டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.


இந்நிலையில், தென்மேற்கு ஆசியா ஆயுதப்படைகளின் பொதுப்பணியாளர் செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் அபுல் பாஸ்ல் ஷங்கர், தாஸ்னெம் செய்தி நிறுவனத்திடம், எங்கள் நாட்டின் மீது ஒரு தோட்டா பாய்ந்தால் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.