UNESCO-வை விட்டு வெளியேறுகிறதா அமெரிக்கா?
யுனெஸ்கோ அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேற உள்ளதாக தெரிவித்துள்ளது!
ஐநா-வின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு எதிராகவும் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி வருவதாக அமெரிக்கா வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் தற்போது யுனெஸ்கோவில் இருந்து விலகப்போவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த அதிரடி அறிவிப்புக்கு அடுத்து இஸ்ரேலும் யுனெஸ்கோ-வில் இருந்து விலகப் போவதாக தெரிவித்துள்ளது.
இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் அதிகாரபூர்வமாக வெளியாகும் எனத் தெரிகிறது. 1980-களில் ரீகன் இருந்த போது யுனெஸ்கோவை விட்டு அமெரிக்கா வெளியேறியது. பின்னர் 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் யுனெஸ்கோவில் அமெரிக்கா இணைந்தது குறிப்பிடத்தக்கது!