15 வயது மாணவிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பறந்து விரிந்த உலகில் பல விசித்திரமான நிகழ்வுகள் நடந்துகொண்டு தான் இருக்கின்றனர். அதில், சில சம்பவம் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும், இன்னும் சில சிரிப்பில் ஆழ்த்தும். இந்நிலையில், 15 வயது மாணவிக்கு பள்ளி ஆசிரியர் ஆபாச வீடியோ அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


30 வயதுடைய செய்டூ சுலய்மான் கோகாயி, வாஷிங்டனில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் பணிபுரிந்து வருகிறார். அங்கு படிக்கும் 15 வயது மாணவிக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பிய அவர், அதற்கு பதிலளிக்கும் படியும் கேட்டுள்ளார். இதுதொடர்பாக அந்த மாணவி அளித்த புகாரின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று அலெக்சாண்டிரியா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கோகாயி தனது குடும்பத்தினரிடமும், நண்பர்களிடம் மன்னிப்பு கோரினார். 


மேலும், அவர் ஆபாச வீடியோக்கள் மட்டுமல்லாமல், ஐ.எஸ் அமைப்பு தொடர்பான வீடியோக்களையும் இளம்பெண்கள்களுக்கு அனுப்பியதால் அவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் வாதிட்டனர். வாதங்களை கேட்ட பின் நீதிபதிகள் குற்றவாளிகளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டனர்.