அல் ஜசீரா தொலைக்காட்சியின் ஒளிபரப்பிற்கு தடை விதித்து இஸ்ரேல் அரசு உத்தரவிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கத்தார் நாட்டின் தோஹா நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருவது அல் ஜசீரா தொலைக்காட்சி. இந்த தொலைக்காட்சி உலகின் பல்வேறு நாடுகளில் கிளை அமைத்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்களின் உணர்வுகளை தூண்டும் விதத்தில் நடந்து கொள்வதாக அல் ஜசீரா மீது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ கூறியுள்ளார்.


ஜெருசலம் நகரில் நிகழ்த்தப்பட்ட மோதல்களில் இந்த தொலைக்காட்சிக்கு முக்கிய இடம் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் ஹமாஸ், ஹிஸ்புல்லா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களின் முக்கிய கருவியாக அல் ஜசீரா இயங்கி வருவதாக கூறினார்.