ஜப்பானில், திருமணம் செய்யும் தம்பதிகள் சட்டப்பூர்வமாக ஒரே குடும்பப் பெயரைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஏறக்குறைய அனைத்து விதமான சந்தர்ப்பத்திலும், திருமணம் செய்து கொள்ளும் பெண் தனது கணவரின் குடும்ப பெயரை ஏற்றுக் கொள்கிறார்.  இதனால், 500 ஆண்டுகளில் ஒவ்வொரு ஜப்பானிய குடிமகனும் "சாடோ" என்ற ஒரே குடும்பப்பெயரைப் பகிர்ந்து கொள்வார்கள் என்று மியாகியில் உள்ள ஒரு பேராசிரியர் கணித்துள்ளார்.  தற்போது மிகவும் பொதுவான குடும்பப்பெயராக ஜப்பானில் இது உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டோஹோகு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹிரோஷி யோஷிடா தலைமையிலான ஆய்வு, திருமணமான தம்பதிகளுக்கு ஒரே குடும்பப் பெயரைத் தேர்ந்தெடுக்க ஜப்பான் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால், ஒவ்வொரு ஜப்பானியரும் 2531 ஆம் ஆண்டுக்குள் 'சாடோ' என்று குடும்ப பெயருடன் அழைக்கப்படுவார்கள் என்று மதிப்பிடுகிறது.


புள்ளிவிவரங்கள் கூறுவது என்ன


2023 ஆம் ஆண்டில், ஜப்பானியர்களில் 1.5 சதவீதத்திற்கும் அதிகமானோர் சாடோ குடும்பப் பெயரை வைத்திருந்தனர். 2022 முதல் 2023 வரை இந்த விகிதம் 1.0083 மடங்கு அதிகரித்துள்ளது என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு காட்டுகிறது.


மக்கள் சாடோ குடும்ப பெயரை வைப்பது தொடர்ந்தால், 2446 இல் ஜப்பானிய மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் 'சாடோ' என்ற குடும்பப்பெயரால் அறியப்படுவார்கள். இது 2531 இல் 100 சதவீதமாக அதிகரிக்கும். அதாவது எல்லோருடைய குடும்பப் பெயரும் சடோ என்று இருக்கும்.


ஜப்பான் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பப்பெயர் கொள்கையை ஏற்கவில்லை என்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. 1800 களில் நடைமுறைப்படுத்தப்பட்ட தற்போதைய சிவில் குறியீட்டை ரத்து செய்யவில்லை என்றால், சாடோ குடும்பப்பெயர் வைப்பது இன்னும் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.


மேலும் படிக்க - ஒரு நாளில் 2,200 நிலநடுக்கங்கள்... ஏன் இந்த நாட்டில் இப்படி? - அதிர்ச்சியில் உறையவைக்கும் உண்மை!


எண்கள் கொண்டு அழைக்கும் நிலை ஏற்படும்


பேராசிரியை யோஷிடா, 'எல்லோரும் சடோவாக மாறினால், நாம் நமது முதல் பெயர் அல்லது இலக்கங்களால் அழைக்கப்பட வேண்டும். அத்தகைய நடைமுறை உலகில் வாழ்வது சிறந்ததாக இருக்காது.


இந்த ஆய்வு மற்றும் அதன் மதிப்பீடுகள் பல அனுமானங்களின் அடிப்படையில் அமைந்திருந்தாலும், சமூகத்தில் ஜப்பானிய திருமணச் சட்டங்களின் சாத்தியமான தாக்கங்களில் கவனம் செலுத்துவதே ஆய்வின் பின்னணியில் இருப்பதாக யோஷிடா கூறினார்.


ஜப்பானின் குடும்பப்பெயர் சட்டம்  கூறுவது என்ன


உலகில் தம்பதிகள் ஒரே குடும்பப்பெயரை வைத்திருப்பதைக் கட்டாயமாக்கும் ஒரே நாடு ஜப்பான். கணவரின் குடும்பப்பெயரை வாழ்க்கைத் துணைவர்களில் ஒருவர் ஏற்றுக்கொள்ளலாம் என்றாலும், 95 சதவீத வழக்குகளில் பெண்களே தங்கள் கணவரின் குடும்பப்பெயரை ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த சட்டம் முதன்முதலில் 1898 இல் மீஜி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. பல நூற்றாண்டுகள் பழமையான இந்த சட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு உள்ளது. இதில் திருத்தம் செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


மேலும் படிக்க - சுனாமி வெள்ளம் பேரழிவு என உலகை உலுக்கிய மறக்கமுடியாத இயற்கைப் பேரழிவுகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ