உலகின் பெரிய பொருளாதாரம்: சரிந்த ஜப்பான், முன்னேறிய ஜெர்மனி.. அப்போ இந்தியா?
உலக பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த ஜப்பான் நான்காவது இடத்துக்கு சரிந்துள்ளது. ஜெர்மனி இப்போது அந்த இடத்தைக் கைப்பற்றியுள்ளது.
உலக பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி செல்லும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். மக்கள் தங்களின் செலவுகளை குறைக்க வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர். மந்தநிலையின் விளைவாக, பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்த நிலையில், ஜப்பானில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை காரணமாக மூன்றாவது இடத்தை ஜப்பான் இழந்துள்ளது. அதாவது, உலகின் முதல் மிகப் பெரிய பொருளாதார நாடாக அமெரிக்காவும், இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக சீனாவும் உள்ளது.
இது குறித்து வெளியாகியிருக்கும் அறிக்கையில், தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகளில் ஜப்பானின் பொருளாதாரம் சரிந்துள்ளது. 2023ல், ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 591.48 டிரில்லியன் (4.2 டிரில்லியன் டாலர்) ஆக உள்ளது. ஜெர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.3 சதவீதமாக ஆக வளர்ச்சி கண்டுள்ளது. இது 4.12 டிரில்லியன் யூரோக்கள் (4.46 டிரில்லியன் டாலர்) ஆக உள்ளது. ஜப்பானில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக உணவு, எரிபொருள் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்து, அவற்றின் நுகர்வு 0.2 சதவீதமாக குறைந்துள்ளது.
ஜப்பானின் எரிபொருள் தேவையில் 94 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதிக்கான செலவு கூடி இருப்பதன் காரணமாக பொருளாதாரத்தில் மந்தநிலை நிலவுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முதலீடு மற்றும் உள்நாட்டு தேவையின் அடிப்படையில் இந்தியா தனது பொருளாதாரத்தை வலுப்படுத்தியுள்ளது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.3 சதவீதமாக வளர்ச்சி அடையும் என்று கூறுகின்றனர்.
வல்லரசு நாடுகள் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் அதே வேளையில், இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக உயர்ந்து வருகிறது. உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 3 சதவீதமாக உள்ளது. உலக பொருளாதாரத்தில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் இந்தியா இப்போதும் அந்த இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க | தன்பாலின திருமணத்தை சட்டபூர்வமாக்கிய கிரேக்கம்! ஆர்தடாக்ஸ் நாட்டின் அதிரடி முடிவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ