அடுத்த அமெரிக்க அதிபர் யார்... 2016-ல் ட்ரம்ப் வருவார் என்பதை கணித்தவர் கருத்து என்ன...!!!
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அடுத்த அமெரிக்க அதிபர் யார் என்ற கேள்வி தான் அனைவர் மனதிலும் உள்ளது.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அடுத்த அமெரிக்க அதிபர் யார் என்ற கேள்வி தான் அனைவர் மனதிலும் உள்ளது.
உலகெங்கிலும் உள்ள மக்கள் அடுத்த அதிபர் யாராக இருக்கும் என்பதை அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர்.
2016 ஆம் ஆண்டு அதிபராக வருவார் என்று இன்று அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் மிகச் சரியாக கணித்து இருந்தார். அவர் அப்போது மட்டுமல்ல, 1984 ஆம் ஆண்டு முதலை, அடுத்த அதிபர் யார் என்பதை சரியாக கணித்து வருகிறார்.
அவர் இப்போது, கணிப்பில், டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைவார் என்றும், ஜோ பிடன் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவார் என்றும் கூறியுள்ளார்.
ALSO READ | பலூன் போல பெருத்துக் கொண்டே போகும் வயிறு; மர்மமான நோய்.. அவதிப்படும் பெண்..
அமெரிக்கப் பல்கலைக் கழகப் பேராசிரியர், அலன் லிச்ட்மேன் (Allan Lichtman), வெள்ளை மாளிகையில் அலங்கரிக்க போகும் அடுத்த அதிபர் யார் என்பதை கணிக்க 13 அம்சங்கள் அடிப்படையில் மேற்கொள்கிறார்.
அவர், பொருளாதார நிலை, மக்களிடம் உள்ள மனநிலை, சமூக அளவில் உள்ள பதற்ற நிலை, ஊழல், வேட்பாளருக்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவு ஆகியவை உட்பட பல விஷயங்களை கருத்தில் கொள்கிறார்.
நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் ட்ரம்ப் நிர்வாக சரியாக செயல்படவில்லை என்ற மனநிலை மக்கள் மத்தியில் உள்ளதாக அவர் கூறுகிறார்.
அதோடு மட்டுமலாமல், சமீபத்தில் போலீஸார் அராஜகத்தினால், கருப்பர் ஒருவர் மரணமடைந்ததை அடுத்து எற்பட்ட வன்முறை போரட்டங்களும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்.
ALSO READ | ஆர்டிக் வெப்பம்: கனடாவில் 4000 ஆண்டு பழமையான கடைசி பனிக்கட்டி தொடரும் உடைந்தது!!!
இவரது கணிப்பு பெரும்பாலும் சரியாகவே இருந்திருக்கின்றது. 1984 ஆம் ஆண்டு அதிபர் ரொனால்ட் ரீகன் தான் வெற்றி பெறுவார் என சரியாக கணித்திருந்தார்,
இவரது கணிப்பு தவறாய் போனது 2000வது ஆண்டு கணிப்பு மட்டுமே. அந்த ஆண்டு அவர், அல் கோர் வெற்றி பெறுவார் என கணித்திருந்தார். ஆனால், அதற்கு மாறாக ஜார்ஜ்.W புஷ் வெற்றி பெற்றார்.