ராணுவ வீரரின் பிறப்புறுப்பை மாற்றிய அமெரிக்க மருத்துவர்கள்!!
அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹோப்கின்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் உலகிலேயே முதல்முறையாக ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்து இருக்கிறார்கள்.
அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தை சேர்ந்த ஹோப்கின்ஸ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
அவர்கள், ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் காயமடைந்த அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரிடம் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.
சுமார் 14 மணிநேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிசையில் 11 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.
இதில், இரண்டு நாட்களுக்கு முன்பு சாலை விபத்து மூலம் உயிரிழந்த இன்னொரு நபரின் பிறப்புறுப்பு இவருக்கு மாற்றப்பட்டது.
இந்த அறுவை சிகிச்சைதான், தற்போது உலகின் முதலாவது ஆணுறுப்பு மற்றும் விதைப்பை மாற்று அறுவை சிகிச்சையாகும்.
இந்த சிகிச்சை மூலம் குணமடைந்து இருக்கும் முன்னாள் அமெரிக்க ராணுவ வீரர் தற்போது நல்ல உடல்நலனுடன் இருப்பதாக கூறப்படுகிறது.