பாலியல் பலாத்காரம் செய்யவில்லை! 47 ஆண்டு சட்டப்போராட்டத்தில் கிடைத்த நீதி
Sexual Harrasement: 47 ஆண்டு பழமையான கற்பழிப்பு வழக்கில் இருந்து விடுதலை, டிஎன்ஏ ஆதாரத்தின் அடிப்படையில் தீர்ப்பை ரத்து செய்தது நீதிமன்றம்
பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்தில் ஏழரை ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த அமெரிக்கர் ஒருவர் கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களுக்குப் பிறகு குற்றவாளி இல்லை என்று தீர்ப்பு வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 47 ஆண்டு பழமையான கற்பழிப்பு வழக்கில் குற்றவாளி என தண்டனையை அனுபவித்து அரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு குற்றவாளியில்லை என்று வெளிவந்த விந்தையான ஆனால் அதிர்ச்சியளிக்கும் தீர்ப்பின் ஆதாரம் டிஎன்ஏ என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த குற்ற வழக்கில் டிஎன்ஏ ஆதாரத்தின் அடிப்படையில் பழைய தீர்ப்பை நீதிமன்றம் ரத்து செய்தது . தேசிய விடுதலைப் பதிவேட்டின்படி, 1989 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் தவறாகக் குற்றம் சாட்டப்பட்ட 575 பேர் புதிய டிஎன்ஏ சோதனைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
லியோனார்ட் மேக் குற்றவாளி இல்லை
AFP செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியின்படி, லியோனார்ட் மேக் என்பவர், 1975 இல் நியூயார்க் மாநிலத்தில் உள்ள கிரீன்பர்க்கில் பள்ளியிலிருந்து வீட்டிற்கு நடந்து சென்ற ஒரு இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டார். இப்போது 72 வயதாகும் மேக், ஆப்பிரிக்க அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | சீனப் பெருஞ்சுவரில் மாற்ற முடியாத பாதிப்பு... ஏன் தெரியுமா?
பாலியல் பலாத்கார வழக்கு
பெரும்பாலும் வெள்ளையர்கள் வசிக்கும் கிரீன்பர்க் பகுதியில், பாலியல் பலாத்காரம் செய்த ஒரு கறுப்பின சந்தேக நபரைத் தேடுவதாக போலீசார் அறிவித்த சிறிது நேரத்தில் ஆப்பிரிக்க அமெரிக்கரான மேக் கைது செய்யப்பட்டார்.
டிஎன்ஏ சான்றுகள்
இன்னசென்ஸ் திட்டத்தின் பிரச்சாரத்தைத் தொடர்ந்து, வெஸ்ட்செஸ்டர் கவுண்டி வழக்கறிஞர் அலுவலகம் ஒரு அறிக்கையில் கூறியது, "அந்த நேரத்தில் டிஎன்ஏ ஆதாரம் கிடைக்கவில்லை, அந்தக் குற்றத்தில் இருந்து மேக், பாலியல் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார்.”
தான் நிரபராதி என்பதை நிரூபிப்பதற்காக மேக் ஏறக்குறைய 50 ஆண்டுகாலமாக சட்டப் போராட்டங்களை மேற்கொண்டு வந்ததை மேற்கோளிட்டு காட்டிய மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம், இது "அமெரிக்க வரலாற்றில் ஒரு மைல்கல்" என்று கூறியது.
மேலும் படிக்க - 31 ஆண்டுகளுக்கு பின் பாரதிராஜாவுடன் இணையும் இசைஞானி இளையராஜா
டிஎன்ஏ பரிசோதனையின் அடிப்படையில் 575 பேர் விடுவிப்பு
தேசிய விடுதலைப் பதிவேட்டின்படி, 1989 முதல், புதிய டிஎன்ஏ சோதனைகளின் அடிப்படையில் 575 தவறாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். நிரபராதி வெள்ளையர்களை விட கறுப்பின சந்தேக நபர்கள் தவறாக தண்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மொத்த அமெரிக்க மக்கள்தொகையில், கறுப்பின மக்களின் எண்ணிக்கை 13.6 சதவிகிதம் மட்டுமே என்றாலும், தேசிய விடுதலைப் பதிவேட்டின்படி, 1989 மற்றும் 2022 க்கு இடையில் தண்டனைகள் ரத்து செய்யப்பட்ட 3,300 பேரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கறுப்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
"தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி" என்பது சட்டக் கோட்பாடாக இருந்தாலும், சர்வதேச அளவில் உரிய நேரத்தில் நீதி கிடைக்காமல் போகும் வழக்குகள் உலகெங்கிலும் விரவிக் கிடக்கின்றன என்பதும், இன வேறுபாடு அதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை சுட்டிக்காட்டும் வழக்காக இது பார்க்கப்படுகிறது.
(AFP செய்தி நிறுவனத்தின் தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது)
மேலும் படிக்க - சினிமா சூப்பர் ஸ்டார்களை திவாலாக்கிய மும்பையின் ராசியில்லாத “பங்களா”!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ