1974ம் ஆண்டு கக்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது இந்தியா. இந்த தீவு இந்தியாவுக்கு சொந்தமானது. இதற்கு முன்பு இந்திய தமிழக மீனவர்கள் அங்கு தான் மீன்களை பிடித்து தங்கள் வாழ்கையை நடத்தி வந்தனர். 1974ம் ஆண்டுக்கு பிறகு அத்தீவில் இந்திய தமிழக மீனவர்கள் மீன்களை பிடித்து கொள்ளலாம் எனவும், அந்தோணியார் விழாவில் கலந்து கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டு இருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் காலபோக்கில் இந்திய தமிழக மீனவர்கள் அங்கு மீன் பிடிக்க சென்றால் இலங்கை அரசு அவர்களை சிறை பிடித்து வைத்து கொள்கிறார்கள். மேலும் மீனவர்கள் சித்திரவதை செய்யப்படுகின்றன.


இதனை எதிர்த்து முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதாவது பாராளுமன்ற அனுமதியின்றி இலங்கையுடன் கச்சத்தீவு ஒப்பந்தத்தை மத்திய அரசு செய்து கொண்டது. இது சட்டவிரோதமானது என்று வழக்கு தொடர்ந்தார். இதற்கு பதில் அளித்த மத்திய அரசு இது முடிந்து போன விவகாரம் என மனுதாக்கல் செய்ததுள்ளது.


ஆனால் இப்போது அங்கு புதிய கிறிஸ்தவ தேவாலயம் கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு விழா நடைபெற்றது. இந்தசெயல் இந்திய தமிழக மீனவர்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது. அதாவது மத்திய அரசிடம் எந்தவித ஆலோசனை கேட்காமல் கச்சத்தீவில் தேவாலயம் அமைக்கும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.


மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இதைபற்றி விசாரித்து அறிக்கை அளிக்குமாறு இலங்கையில் உள்ள இந்திய தூதருக்கு  உத்தரவிட்டுள்ளது.