காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆக்கிரமித்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அமெரிக்க படைகளும் முழுமையாக வெளியேறி விட்டன. ஆனாலும், ஆப்கானிஸ்தானை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள தாலிபான்களால், இன்னும் புதிய அரசை அமைக்க முடியவில்லை. தாலிபான் பயங்கரவாதிகள் பஞ்சஷீர் பள்ளத்தாக்கிற்குள் நுழைய முயன்றாலும், வடக்கு கூட்டணியின் பலமான எதிர்ப்பால் அவர்களால், முன்னேற முடியவைல்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தலிபான்கள் வெள்ளிக்கிழமை, தாங்கள் பஞ்சஷீர் பள்ளத்தாக்கை வென்றதாகக் கூறினாலும், சிறிது நேரத்திலேயே, பஞ்ச்ஷீரில் தலிபான்களுக்கு எதிராகப் போரிட்ட அம்ருல்லா சலேஹ், தலிபான்களின் கூற்று மிகவும் பொய்யானது என்று ஒரு வீடியோவை வெளியிட்டார். பஞ்சஷீரில் ஒவ்வொரு முறையும் தோல்வியடையும் தாலிபான்கள், ஏன் பொய் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர் என்ற கேள்வி பல தரப்பில் இருந்தும் எழும்புகிறது.


பஞ்சஷீர் போரில் வெற்றி பெற முடியாத தாலிபான்கள் (Taliban) வடக்கு கூட்டணியின் மன உறுதியை பலவீனப்படுத்த விரும்புகிறார்கள். ஒருபுறம்,  பஞ்சஷீரின் 4 மாவட்டங்களை தாங்கள் ஆக்கிரமித்துள்ளதாக தாலிபான்கள் கூறுகின்றனர், அதே நேரத்தில் வடக்கு கூட்டணியின் சார்பில், முன்னாள் துணை அதிபர் அமருல்லா சலேஹ், பஞ்சஷீர் பகுதியை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுவது, முற்றிலும் தவறான செய்தி என்று கூறுகிறார்.


ALSO READ | ஆப்கானை ஆள இருக்கும் முல்லா அப்துல் கானி பராதர்; யார் அந்த ‘பராதர்’..!!


பஞ்சஷீர் பகுதி முழுவதையும் கைப்பற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தாலிபான்கள் கூறுகின்றனர். மறுபுறம், இதுவரை 200 தாலிபான் பயங்கரவாதிகள் சரணடைந்துள்ளதாக வடக்கு கூட்டணி கூறுகிறது. அம்ருல்லா சலே பஞ்சஷீரை விட்டு தப்பிச் சென்றதாக தலிபான்கள் வதந்திகளைப் பரப்புகிறார்கள். ஆனால், அம்ருல்லா சலேஹ் ஒரு வீடியோவை வெளியிட்டு, நான் தப்பித்ததாக கூறப்படும் செய்தி தவறானது என கூறியுள்ளார். தலிபான்கள் பல வீடியோக்களை வெளியிட்டு பஞ்ஷீரில் போராடும் எதிர் தரப்பின்  டாங்கிகள் மற்றும் பீரங்கிகளைக் கைப்பற்றியதாக தெரிவித்தனர். ஆனால் ஒரு வாரத்தில் சுமார் 600 தலிபான்கள் கொல்லப்பட்டதாக வடக்கு கூட்டணி கூறுகிறது.


இதில் யாருடைய கூற்று உண்மை, யாருடைய பொய் என்று இப்போது சொல்ல முடியாது என்றாலும், தாலிபான்கள் பஞ்சஷீரை கைப்பற்ற போராடுகிறது என்பதும் தாலிபான்களை விரட்டவும் மற்றும் பஞ்சஷீரை கைப்பற்றுவதை தடுக்கவும் தன்னால் முடிந்தவரை வடக்கு கூட்டணி படைகள் முயல்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.


ஆப்கானிஸ்தான் முழுவதையும் தாலிபான்கள் எளிதாகக் கைப்பற்றினார்கள். பஞ்சஷீர் பள்ளத்தாக்கில் தாலிபான்களை தடுத்து நிறுத்துவதில், இன்று வரை வடக்கு கூட்டணி வெற்றி கண்டு வருகிறது. அதனால் மீண்டும் தாலிபான் அரசு புதிய அரசை அறிவிக்க முடியாத நிலையில் உள்ளது.


ALSO READ:ஆப்கான் விமான தளத்தை தன் வசப்படுத்த சீனா முயற்சி: இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த நிக்கி ஹேலி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR