லாஸ்வேகாஸ் தாக்குதல் எதிரொலி: இருளில் மூழ்கிய ஈபல் டவர்!
லாஸ் வேகாஸ் மற்றும் மார்சேயில் தாக்குதல்களின் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையினில் திங்களன்று இரவு ஈபிள் டவர் இருட்டாக்கிவிட பட்டது.
பாரிஸ்: லாஸ் வேகாஸ் மற்றும் மார்சேயில் தாக்குதல்களின் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையினில் திங்களன்று இரவு ஈபிள் டவர் இருட்டாக்கிவிட பட்டது.
முன்னதாக லாஸ் வேகாஸில் நடைப்பெற்ற கச்சேரி ஒன்றில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் நடத்திய துப்பாக்கிசூட்டில் குறைந்தபட்சம் 59 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர்.
இதேப்போல் ஞாயிற்றுக்கிழமை, பிரான்சின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான மார்சேயில் பிரதான ரயில் நிலையத்திற்கு வெளியே இரண்டு இளம் பெண்களைக் மர்ம மனிதன் ஒருவன் கத்தியால் குத்திக் கொன்றான்.
இந்த இருவேரு சம்பவங்களின் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கள தெரிவிக்கும் வகையினில் பாரிஸ் ஈபில் டவரின் விளக்குகள் நேற்று இரவு அணைத்து வைக்கப்பட்டது.
முன்னதாக "மேயெஸ்லி மற்றும் லாஸ் வேகாஸில் நடந்த தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுகாக இன்று இரவு நாங்கள் ஈபிள் கோபுரத்தின் விளக்குகளை அணைத்து வைப்போம்" என்று பாரிஸ் மேயர் ஆன் ஹிலிகோ தெரித்தது குறிப்பிடத்தக்கது.