அமெரிக்கா, லாஸ் வேகாஸ் நகரில் கேசினோ ஓட்டல் ஒன்றில் கடந்த ஞாயிறு இரவு நடைப்பெற்ற கச்சேரி கூட்டத்தினில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடிரென துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுத் தள்ளியதில் 59 பேர் பலியாகியுள்ளனர், 500-க்கும் அதிகமானவர் காயமடைந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சம்பவத்தின் போது, துப்பாக்கிசுடும் சத்தம் கேட்டதும் அங்கு கூடியிருந்த மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 


அமெரிக்கா மட்டும் இல்லாமல் உலக மக்கள் அனைவரது கவனத்தை ஈர்த்த இச்சம்பவத்தில் 64 வயதான ஸ்டீஃபன் பாட்கோக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


சம்பவம் தொடர்பாக போலீசார் ஸ்டீபனின் காதலி மரிலூ டான்லியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஸ்டீபன் எதற்காக இப்படி துப்பாக்கிச்சூடு நடத்தினார், இந்த தாக்குதல் குறித்து முன்பே தெரியுமா, அப்படி தெரிந்திருந்தால் அதிகாரிகளுக்கு ஏன் தகவல் கொடுக்கவில்லை என்று போலீசார் டான்லியிடம் கேட்டுள்ளனர்.


இந்த விசாரணையில் ஸ்டீபன் ஏன் இப்படி செய்தார் என்பது தெரியவில்லை. அதனால் டான்லி தான் போலீசாருக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை என்று கூறப்படுகிறது.


தாக்குதல் நடத்துவதற்கு முன்பு ஸ்டீபன் திடீர் என்று பிலிப்பைன்ஸில் உள்ள என் வீட்டிற்கு பணம் கொடுத்தது அனுப்பி வைத்தான். அதனால் முதலில் கவலையாக இருந்தது. என்னை அனுப்பி வைத்துவிட்டு அவர் வன்முறையில் ஈடுபடுவார் என்று நான் நினைக்கவே இல்லை என்கிறார் டான்லி.