அமேசான் காடுகளில் வாழ்ந்த பழங்குடியினத்தின் கடைசி நபர் மரணம்!
அமேசானில் உள்ள ஒரு பழங்குடியின குழுவின் கடைசி நபராக கருதப்பட்ட அடையாளம் தெரியாத பழங்குடி மனிதர் காலமானார்.
அமேசானில் உள்ள ஒரு பழங்குடியின குழுவின் கடைசி நபராக கருதப்பட்ட அடையாளம் தெரியாத பழங்குடி மனிதர் காலமானார். அவரது மரணம் ஆர்வலர்களிடையே பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. கலைகள் மற்றும் மொழிகளின் பாதுகாப்பிற்காக உழைக்கும் பலர், பிரேசிலிய அமேசான் பழங்குடியினர் அனைவரையும் இழந்துவிட்டதாக வருத்தம் தெரிவித்தனர். இந்த இழப்பு ஒட்டுமொத்த கலாச்சாரத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை என அச்சம் வெளியிட்டனர்.
மரணித்த பழங்குடி மனிதர், Índio do Buraco அல்லது "பதுங்குகுழியின் பழங்குடி மனிதர்" என்று அறியப்பட்டார் என தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது . அவர் வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் கொண்டிருக்கவில்லை, மேலும் தொடர்பை ஏற்படுத்துவதற்கான எந்தவொரு முயற்சியும் அவர் முறியடிக்கவே செய்தார். அவர் வசிப்பிடத்திற்கு அருகில் ஏற்படுத்தியுருந்து பதுங்கு குழிகளிலிருந்து அம்புகளை எய்தி தாக்குதல் நடத்தி, யாரையும் வர விடாமல் தடுத்தார்.
"கொடூரமான படுகொலைகள் மற்றும் நிலப் படையெடுப்புகளைத் தாங்கிக்கொண்டு, வெளியாட்களுடன் தொடர்பை நிராகரித்ததே, அவரது உயிர்வாழ்வதற்கான சிறந்த வாய்ப்பாக இருந்தது" என்று சர்வைவல் இன்டர்நேஷனலின் பிரச்சாரகர் சாரா ஷெங்கர் கூறினார். "அவர் அமேசான் காட்டிம் பழங்குடியினரின் கடைசி நபர், அதனால் இன்னும் ஒரு பழங்குடி இனிம் அழிந்தது - மறைந்துவிடவில்லை. இதனை இனப்படுகொலை என்று தான் கூற வேண்டும்" என்றார்.
மேலும் படிக்க | Viral News: தன்னை கடித்த பாம்பை கடித்து குதறிய 2 வயது சிறுமி!
மரணித்த அந்த பழங்குடியின நபர் உள்ளூர் ஊடகங்களில் நிறைய கட்டப்பட்டார். பல ஆவணப்படங்களில் கூட இடம்பெற்றார். "அவர் யாரையும் நம்பவில்லை, ஏனென்றால் அவர் பழங்குடியினரல்லாத மக்களுடன் அவரைருக்கு, பல அதிர்ச்சிகரமான அனுபவங்கள் ஏற்பட்டன," என்று ஓய்வுபெற்ற ஆய்வாளரான மார்செலோ டாஸ் சாண்டோஸ் தி கார்டியனிடம் கூறினார்.
தற்போது, பிரேசிலில் 300 க்கும் குறைவான பழங்குடியினர் இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும், அந்த எண்ணிக்கை மெதுவாக குறைந்து வருகிறது. இன்னும் 30 குழுக்கள் உள்ளன. ஆனால் நிபுணர்களிடம் அவை பற்றிய தகவல் இல்லை.
மேலும் படிக்க | மீண்டும் ஆயுத சோதனை: 2 க்ரூஸ் ஏவுகணைகளை ஏவியது வட கொரியா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ