மதுபான கடை கூடுதலாக ஒரு மணிநேரம் திறப்பு: இலங்கை நிதி அமைச்சகம்!
பெண்களும் மதுபானம் வாங்கலாம், விற்கலாம். ஆண் மற்றும் பெண் சமத்துவத்தினை மீண்டும் நிலை நிறுத்திய இலங்கை.
இலங்கை கடந்த 1979-ம் வருட தொடக்கத்தில் திறந்தவெளி சந்தை பொருளாதார நிலையை தனது நாட்டில் கொண்டுவந்தது. அதில் பெண்கள் மதுபானம் வாங்குவதற்கும் மற்றும் விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டது.
இந்த தடை நடைமுறையில் இருந்த நிலையிலும் பல தொழில் நிறுவனங்கள் பெண்களை மதுபானம் பரிமாறும் மற்றும் விற்கும் பணியில் ஈடுபடுத்தியது. அவர்களுக்கு மதுபானங்களை விற்கவும் செய்தன.
இந்த நிலையில் இலங்கை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் ஆண் மற்றும் பெண் சமத்துவத்தினை மீண்டும் நிலை நிறுத்தவும் மற்றும் சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் வகையிலும் பெண்களுக்கு விதிக்கப்பட்ட இந்த தடையை நீக்குவது என அரசு முடிவு செய்தது. இதனை தொடர்ந்து மந்திரி மங்கள சமரவீரா இதற்கான கையெழுத்தினை இட்டுள்ளார் என தெரிவித்துள்ளது.
இலங்கையில் இரவு 10 மணிவரை மதுபான கடைகள் திறந்திருப்பதற்கும் அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் வழக்கத்தினை விட கூடுதலாக ஒரு மணிநேரம் மதுபான கடை திறந்திருக்கும்.