லண்டன் பயங்கரவாத தாக்குதல்: சுரங்க குழாயில் குண்டுவெடிப்பு, பலர் படுகாயம்
லண்டனில் சுரங்க பாதையில் சென்றுக்கொண்டிருந்த ரயிலில் குண்டு வெடித்தால், ரயில் முழுவதும் தீ பரவியது. இதனால் பயணிகள் தங்களை காப்பாற்றிக்கொள்ள அங்கும் இங்கும் ஓடி உள்ளனர். மேலும் பலருக்கு தீ காயம் ஏற்பட்டுள்ளது என லண்டன் மெட்ரோ செய்தித்தாள் கூறியுள்ளது.
தற்போது அங்கு மீட்பு பணியும், காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவியும் மேற்கொள்ளப் பட்டுவருகிறது.