மால்டா தீவில் விமானம் விபத்து: 5 பேர் பலி
மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள மால்டா தீவின் சர்வதேச விமான நிலையத்தில் சிறிய ரக விமானம் ஒன்று இன்று விபத்துக்குள்ளானது.
லுகா விமான நிலையத்தில் இருந்து லிபியாவிற்கு புறப்பட்ட விமானமானது புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையிலேயே மோதி விபத்து ஏற்பட்டது. விமானம் தீப்பிடித்து எரிந்ததால் அந்த இடமே புகை மூட்டமாக காணப்பட்டது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தனர். இதில் பயணம் செய்த அதிகாரிகள் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
மால்டா சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளனர். அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை விமான நிலையம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.