கிரேக்கம்: மத்திய கிரேக்கத்தில் புதன்கிழமையன்று 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிக தாக்கத்தை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கம், அல்பேனியா, வடக்கு மாசிடோனியா, கொசோவோ மற்றும் மாண்டினீக்ரோவின் தலைநகரங்களிலும், வெகு தொலைவில் உள்ள பகுதிகளிலும் உணரப்பட்டது. எனினும், இந்த நில நடுக்கத்தால் யாருக்கும் எந்த வித காயங்களும் ஏற்பட்டதாக உடனடியாக வந்த தகவல்களில் தெரிவிக்கப்படவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சில கட்டமைப்பு சேதங்கள் ஏற்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் அறிவித்தனர். பழைய வீடுகள் மற்றும் கட்டிடங்களின் சுவர்கள் இடிந்து விழுந்ததாகவும் சில இடங்களில் சிதைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.


லாரிசா நகரிலிருந்து 22 கிலோமீட்டர் (13.67 மைல்) மேற்கு-வடமேற்கில் நிலநடுக்கத்தின் (Earthquake) மையப்புள்ளி இருந்ததாகவும், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 12:15 மணிக்குப் (1015 ஜிஎம்டி) பின்னர் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.


ALSO READ: இந்திய துறைமுகங்களை தீவிரமாக குறிவைக்கும் Chinese Hackers! திடுக்கிடும் தகவல்



இந்த நிலநடுக்கம் ஏற்பட்டபோது ஒரு கடையில் பதிவான காட்சிகளின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.


லாரிசா மற்றும் டைர்னாவோஸில், நிலநடுக்கம் ஏற்பட்ட உடனேயே, மக்கள் வீடுகளிலிருந்தும் அலுவலக கட்டிடங்களிலிருந்தும் தெருக்களுக்கு விரைந்து செல்வதைக் காண முடிந்தது. அமெரிக்க (America) புவியியல் ஆய்வு மற்றும் குளோபல் நில அதிர்வு மானிட்டர் ஜியோஃபோன், நிலநடுக்கத்தின் முதல்கட்ட அளவை 6.3 என அளவிட்டுள்ளது. வடக்கு கிரேக்கத்தில் உள்ள தெசலோனிகியின் அரிட்டாட்டில் பல்கலைக்கழகத்தின் நில அதிர்வு நிறுவனம் இந்த அளவை 6.0 ஆக மதிப்பிட்டுள்ளது.


நிலநடுக்கத்திற்குப் (Tremors) பிறகு அப்பகுதிகளில் பல பின்னதிர்வுகள் ஏற்பட்டதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவற்றில் ஒரு பின்னதிர்வு மிக அதிகமான ரிக்டர் அளவைக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.     


ALSO READ: போர்களத்தில் வெல்ல முடியாத சீனா, இந்தியா மீது நடத்திய சைபர் தாக்குதல்...!!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR