தடுப்பூசி போடாதவர்களுக்கு இனி வரி!

கனடாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு இனி மருத்துவ வரி விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கடந்த 2019-ல் சீனாவை உலுக்கிய கொரோனா தொற்று இன்று வரையிலும் உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. இவை ஒவ்வொரு நாளும் குறையத்தொடங்கும் என்று நினைத்தால், இவை அதிவேகமாக பலவித உருமாற்றங்களுடன் தொடர்ந்து உருமாறிக்கொண்டே சென்று விஞ்ஞானிகளுக்கு சவால் விடுகிறது. கடந்த ஆண்டு இதன் தாக்கம் குறைய தொடங்கி மக்கள் இயல்புநிலைக்கு திரும்பிக்கொண்டிருந்த சமயத்தில் மீண்டும் கொரோனாவின் மாறுபாடான ஓமிக்ரான் மக்களை மீண்டும் முடங்கியுள்ளது. இத்தகைய நோய் தாக்கத்திலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள ஒவ்வொரு அரசும் தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் முக்கியமான ஒன்று தடுப்பூசி செலுத்திக்கொள்வது, தடுப்பூசிகள் கொரோனா தொற்றை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரும் திறன் பெற்றதால் அதனை மக்களை அனைவரும் செலுத்திக்கொள்ள பல நாட்டு அரசும் வலியுறுத்தி வருகின்றது.
ALSO READ | Omicron வந்தால் வரும் முதல் அறிகுறி இதுதான்: நிபுணர்களின் எச்சரிக்கை
முன்பு கால இடைவெளி விட்டு இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டு வந்த நிலையில், தற்போது அதிவேக நோய்த்தொற்று பரவலின் காரணமாக மூன்றாவது டோஸாக பூஸ்டர் தடுப்பூசியையும் பல நாடுகள் மக்களுக்கு செலுத்த தொடங்கிவிட்டது. ஆனால் இன்னும் பெரும்பாலான இடங்களில் முதல் இரண்டு டோஸ்களை கூட செலுத்தாமல் மக்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் மக்களின் நலனை காக்கும் பல்வேறு அரசுகளும் பல்வேறு விதிகளை விதிக்கும் நிலையில், கனடா அரசு தடுப்பூசி செலுத்தாத மக்களுக்கு ஒரு அதிரடியான சட்டத்தை பிறப்பித்துள்ளது.
கனடாவில் அதிகளவில் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் பல உயிரிழப்புகளையும் அந்நாடு சந்தித்து வருகிறது. இவ்வாறு நிலைமை தீவிரமடைந்து வருகையில் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பலரும், இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது. இன்னும் சிலர் முதல் டோஸ் தடுப்பூசியையும் செலுத்திக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து கனடாவின் கியூபெக் மாகாணத்தில் அதிக நோய்த்தொற்று இருப்பதால் அம்மாகாணத்தின் பிராங்கோயிஸ் வெகால்ட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு இனி மருத்துவ வரி விதிக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் இதற்கு இன்னும் கட்டணம் நிர்ணயம் செய்யப்படவில்லை, முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் கண்டிப்பாக வரி செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
ALSO READ | Omicron முக்கிய செய்தி: ஜலதோஷமும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறதா? ஆய்வில் தகவல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR