மன வளர்ச்சி குன்றிய இந்திய வம்சாவழியை தூக்கிலிட்ட சிங்கப்பூர் அரசு! காரணம் என்ன?
மன வளர்ச்சி குன்றிய இந்திய வம்சா வழி இளைஞர் நாகேந்திரன் தர்மலிங்கத்தை சிங்கப்பூர் அரசு இன்று தூக்கிலிட்டது.
மலேசியாவைச் சேர்ந்த இந்தியர் நாகேந்திரன் தர்மலிங்கம், 34 வயதான மன வளர்ச்சி குன்றி நபர் ஆவார்.
இவர் 2009 ஆம் ஆண்டு சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில், தனது கால் தொடையில் 42.72 கிராம் ஹெராயின் போதை பொருளை ஸ்டிராப்பால் கட்டிக்கொண்டு மறைத்து கடத்தி செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டார்.
சிங்கப்பூரின் போதைப்பொருள் சட்டத்தின் கீழ் (இது உலகின் மிகக் கடுமையான சட்ட திட்டம்) 15 கிராமிற்கு அதிகமாக போதைப் பொருள் கடத்தினால் மரண தண்டனை விதிக்கப்படும் என்ற சட்டம் உள்ளது குறிப்பிடதக்கது.
இக்குற்றத்திற்காக 2010 ஆம் ஆண்டு நவம்பரில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சிங்கப்பூர் நீதிமன்றத்தால் மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.
மேலும் படிக்க | இலங்கையில் பறை இசை போராட்டம்; ராஜபக்ச அரசு பதவி விலக வலியுறுத்தல்
மேலும் நாகேந்திரன் தர்மலிங்கத்தின் மரண தண்டனை 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் தேதி நிறைவேற்றப்படவிருந்தது. ஆனால் அவரது தாயாரின் மேல்முறையீடு காரணமாக மரண தண்டனை தேதி ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் நாகேந்திரனின் தாயாரின் மேல்முறையீடு கடந்த செவ்வாய் கிழமை தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து இன்று (27.4.2022) அவரது மரண தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தண்டனை பெற்ற இந்திய வம்சாவளி மலேசியரான நாகேந்திரன் தர்மலிங்கம், சிங்கப்பூரில் இன்று தூக்கிலிடப்பட்டதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து நாகேந்திரனின் சகோதரர் நவின் குமார் கூறுகையில், "நாகேந்திரன் தர்மலிங்கம் இன்று காலை தூக்கிலிடப்பட்டார் மற்றும் அவரது உடல் வடக்கு தீபகற்ப மலேசியாவில் உள்ள ஈப்போ நகருக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது" என்று தெரிவித்தார்.
இவரது மரண தண்டனையை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் போராட்டங்கள், மற்றும் கையெழுத்திட்ட எதிர்ப்பு கடிதம் என பல வகையில் எதிர்ப்புகளை தெரிவித்தனர். ஆனால் அவர்களின் முயற்சி வீணானது என்பது வருத்தமளிக்கிறது.
மேலும் படிக்க | Sri Lanka Crisis: இலங்கைக்கு 50 கோடி டாலர் கூடுதல் கடன் வழங்க இந்தியா ஒப்புதல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR