மெக்சிக்கோவில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த பூகம்பத்தில் கட்டடங்கள் தீவிரமாக நொருங்கி இடிந்து விழுந்தது. 27 கட்டடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமானது. 
இதில் 226 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் பூகம்பம் காரணாமாக கேஸ் லைன் கசிய வாய்ப்புள்ளதால், நெருப்பை உண்டாக்கும் சாதனங்களை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களை மீட்பு குழுவினர் எச்சரித்து வருகின்றனர்.


இடிப்பாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், மெக்சிகோவின் தலைநகரில் கிட்டத்தட்ட 20 லட்சம் மக்கள் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர். மக்களின் தொலைபேசிகளும் இயங்கவில்லை. 


இந்த பூகம்பத்தால் மத்திய மெக்சிகோ பகுதியில் உள்ள மெக்சிகோ சிட்டி, மொர்லோஸ், ப்யூப்லா மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் தரைமட்டமாகின.


நிலநடுக்கத்தில் சிக்கி 226 பேர் பலியாகியுள்ளதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.