காதலியை கொடூரமாக தாக்கி பின்னர் Selfi எடுத்து காதலன்!
லண்டனை சேர்ந்த பிரபல மாடல் அழகியினை கொடூரமாக தாக்கி, அவரது ரத்த காய முகத்துடன் அவரது காதலன் செல்பி எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
லண்டனை சேர்ந்த பிரபல மாடல் அழகியினை கொடூரமாக தாக்கி, அவரது ரத்த காய முகத்துடன் அவரது காதலன் செல்பி எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
லண்டன் நகரை சேர்ந்தவர் பிரபல மாடல் அழகி மர்த்தா டோலக்(31), இவரை கிட்ட தட்ட 18 மாத காலங்களாக தனி வீட்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்து, அந்த காட்சிகளை புகைப்படமெடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இக்குற்றச்செயலில் ஈடுப்பட்டவர், மர்த்தாவின் காதலர் மைக்கல் குட்வின்(30) என அடையாளம் காணப்பட்டுள்ளார். தனது காதலியின் மாடல் புகைப்படங்களுக்கு வரும் விமர்சணங்களை பொருத்துக் கொள்ள முடியாத அவர் முதலில் தன் காதலி மர்த்தாவினை கண்டித்துள்ளார். பின்னர் அவரை தனி வீட்டில் அடைத்து சித்திரவதை செய்துள்ளார்.
இச்சம்பவங்களின் போது குட்வினின் குழந்தைகள் இருவரும் அதே வீட்டில் தான் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பலநாள் தேடலுக்கு பின்னர் மர்த்தாவினை கண்டுபிடித்த காவல்துறையின்ர இச்சம்பவம் தொடர்பாக மைக்கல் குட்வின்னை கைது செய்துள்ளனர்.
மீட்கபட்ட மர்த்தா இதுகுறித்து தெரிவிக்கையில்... தன்னை அடைத்து வைத்த அறையில் ஜன்னல்கள் இல்லாமல் இருந்ததாலும், பொருத்தப்பட்ட இரண்டு கதவுகளும் திறக்கமுடியாத வகையில் அடைக்கப்பட்டிருந்ததாலும் தன்னால் தப்பிக்க முடியாமல் போனது. மேலும் யாரும் உதவிக்கு அற்ற நிலையில் யாரிடம் நான் தகவல் கொடுத்து தப்பிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.