ஆப்கானிஸ்தான் மசூதியில் வெடி விபத்து: 12 பேர் காயம்
கிழக்கு ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஸ்பின் கர் மாவட்டத்தில் உள்ள மசூதியில் ஏற்பட்ட வெடி வெடிப்பில் மசூதியின் இமாம் உட்பட குறைந்தது 12 பேர் காயமடைந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
காபூல்: கிழக்கு ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஸ்பின் கர் மாவட்டத்தில் உள்ள மசூதியில் ஏற்பட்ட வெடி வெடிப்பில் மசூதியின் இமாம் உட்பட குறைந்தது 12 பேர் காயமடைந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
அப்பகுதியில் வசிக்கும் அடல் ஷின்வாரி கூறுகையில், ‘மதியம் 1:30 மணியளவில், மசூதியின் உள்பகுதியில் இருந்த வெடிபொருட்கள் வெடித்த போது, வெடி விபத்து ஏற்பட்டது.’ என்றார்.
தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாத ஒரு தாலிபான் (Taliban) அதிகாரி, வெடி விபத்தை உறுதிப்படுத்தினார். உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என தான் அஞ்சுவதாகவும், எனினும் மேலதிக விவரங்கள் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
ALSO READ: ஆப்கானிஸ்தானில் தொடரும் அவலம்: அடுத்த கட்டளையை வெளியிட்டது தாலிபான்
இந்த தாக்குதலுக்கு யாரும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை, சமீபத்திய வாரங்களில் ஆப்கானிஸ்தானில் (Afghanistan) மசூதிகளைத் தாக்கிய தொடர்ச்சியான குண்டுவெடிப்புகள் நடந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பல தசாப்தங்களாக இருந்த போருக்குப் பிறகு பாதுகாப்பு மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக தாலிபான் கூறி வருவதற்கு இது எதிர்மறையாக உள்ளது.
இந்த மசூதியில் சன்னி முஸ்லிம்கள் பிரார்த்தனைகளில் கலந்துகொள்வது வழக்கம். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்ததிலிருந்து, நடந்த முந்தைய தாக்குதல்களில் ஷியா மசூதிகளில் தாக்குதல்கள் நடந்துள்ளன. இவற்றுக்கு சன்னி போராளிக் குழுவான இஸ்லாமிக் ஸ்டேட் பொறுப்பேற்றது.
பலி எண்ணிக்கைப் பற்றி பல தரப்புகள் வெவ்வேறு விதமாக கூறி வருகின்றன. மசூதியின் (Mosque) இமாம் உட்பட குறைந்தது 12 பேர் காயமடைந்ததாக ஷின்வாரி கூறினார். மற்றொருவர் கூறுகையில், 15 பேர் காயமடைந்தனர் என்றும் அதில் மூன்று பேர் மோசமாக காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ALSO READ: Bubble of freedom: ஆஃப்கன் பெண்களின் ஒரே மீட்டிங் பாயிண்ட்! இனியும் இருக்குமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR