அமெரிக்காவில் இஸ்லாமியப் பெண் படுகொலை
அமெரிக்காவில் நண்பர்களுடன் தொழுகையை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்ற இஸ்லாமியப் பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வெர்ஜினியா மாகாணத்தில் உள்ள ரெஸ்டோன் நகரில் நப்ரா ஹசனன் (17) என்ற இஸ்லாமியப் பெண் வசித்து வந்தார். ரமலான் மாதம் என்பதால் நேற்று காலை அருகில் உள்ள மசூதிக்கு நண்பர்களுடன் சென்று தொழுகை முடித்து விட்டு ரோட்டில் நடந்து சென்றனர்.
அப்போது, சாலையில் வந்த கார் ஒன்றில் இருந்த ஓட்டுனருக்கும், அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் கார் ஓட்டுனர் கீழே இறங்கி வந்து இஸ்லாமிய பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளார். இக்காட்சியை கண்ட நண்பர்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர்.
ஆனால், திடிரென இஸ்லாமியப் பெண் காணாமல் போயுள்ளார். இதனால் அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து, போலீசார் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.
இந்நிலையில், பிற்பகல் 3 மணியளவில் ஸ்டெர்லிங் என்ற பகுதியில் சிதைந்த நிலையில் இஸ்லாமியப் பெண்ணின் சடலம் கிடந்தது. சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், போலீசார் டார்விஉன் மார்டினஸ் என்ற நபரை கைது செய்துள்ளனர்.