பூமியின் புத்தாண்டை விண்வெளியில் கொண்டாடிய மனிதர்கள்!
வரலாற்றில் முதன்முறையாக விண்வெளியில் பத்து பேர் புத்தாண்டைக் கொண்டாடினார்கள்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஏழு பேரும், சீன நிலையமான டியாங்காங்கில் மூன்று பேரும் புத்தாண்டை கொண்டாடியதாக ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் சனிக்கிழமையன்று அறிவித்தது, இது விண்வெளியில் கொண்டாடப்பட்ட முதல் புத்தாண்டு ஆகும்.
"2022ஆம் ஆண்டு மலர்ந்ததை, பூமிக்கு அருகில் உள்ள சுற்றுப்பாதையில் இருந்த பத்து மனிதர்கள்கொண்டாடினார்கள். சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏழு மற்றும் சீன டியாங்காங் விண்வெளி நிலையத்தில் மூன்று பேர் என மொத்தம் 10 பேர் புத்தாண்டை கொண்டாடினார்கள் என Roscosmos அமைப்பு தனது இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"இது சுற்றுப்பாதையில் ஒன்றிணைந்து கொண்டாடிய வரலாற்று சிறப்புமிக்க புத்தாண்டு கொண்டாட்டம். மனிதர்களை ஏற்றிச் சென்ற விண்வெளி ஆய்வில் நிகழ்த்தப்பட்ட சரித்திர சாதனை" என்று ரோஸ்கோஸ்மோஸ் குறிப்பிட்டுள்ளது.
READ ALSO | அண்டார்டிகாவிலும் கொரோனா! விஞ்ஞானிகளுக்கு கோவிட் பாதிப்பு!
ரோஸ்கோஸ்மோஸின் கூற்றுப்படி, கடந்த 21 ஆண்டுகளில் 83 பேர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (International Space Station) புத்தாண்டு கொண்டாட்டத்தை கழித்துள்ளனர், பல விண்வெளி வீரர்கள் வீராங்கனைகள் பல முறை அவ்வாறு செய்துள்ளனர்.
அன்டன் ஷ்காப்லெரோவ் (Anton Shkaplerov) என்ற ரஷ்ய விண்வெளி வீரர், 2012, 2015, 2018 மற்றும் 2022 என நான்கு புத்தாண்டுகளை விண்வெளியின் சுற்றுப்பாதையில் கழித்தார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில், விண்வெளி வீரர்களான அன்டன் ஷ்காப்லெரோவ் மற்றும் பியோட்ர் டுப்ரோவ் ஆகியோர் நாசா விண்வெளி வீரர்களான மார்க் வந்தே ஹை, தாமஸ் மார்ஷ்பர்ன், ராஜா சாரி, கைலா பரோன் மற்றும் ஈஎஸ்ஏ விண்வெளி வீரர் மத்தியாஸ் மௌரர் ஆகியோருடன் இணைந்து டியாங்காங் விண்வெளி நிலையமான ஹை ஜிகாங் மற்றும் யே வாங் யாப்பிங் ஆகியவற்றில் பணிபுரிகின்றனர்.
விண்வெளித் திட்டத்தின் ஆரம்ப ஆண்டுகளில் விண்வெளியில் விடுமுறைகள் ஒப்பீட்டளவில் அசாதாரணமானவை.
1977-1978 இல் சுற்றுப்பாதையில் ரோமானென்கோ மற்றும் ஜார்ஜி கிரெச்கோ என்ற இரு விண்வெளி வீரர்கள் புத்தாண்டைக் கொண்டாடினார்கள். விண்வெளிப் பயணம் நீண்டதாக மாறிய பிறகு, விண்வெளி வீரர்கள் அங்கு நீண்ட நாட்கள் இருக்க வேண்டியிருக்கிறது.
1986 ஆம் ஆண்டில் சோவியத் மிர் விண்வெளி நிலையம் தொடங்கப்பட்ட பிறகு, புத்தாண்டு கொண்டாட்டம் ஒரு வழக்கமான நிகழ்வாக மாறியது. பூமியில் கொண்டாடப்படும் ஆங்கில புத்தாண்டை முதன்முறையாக விண்வெளியில் 12 விண்வெளி வீரர்கள் பூமிக்கு அருகில் இருந்த சுற்றுப்பாதையில் கழித்தனர்.
ALSO READ | சீண்டிப் பார்க்கும் சீனா: தகுந்த பதிலடி கொடுத்த இந்தியா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR